புதுடில்லி,ஜன.1- ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷா வீட்டுக்கு செல்லும் வழியில் அமைந்து இருக்கும் முகலாயர் கால மசூதியை இடிக்க புதுடில்லி நகராட்சி கவுன்சில் தாக்கீது அனுப்பி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு, உத் யோக் பவன், இந்திய விமானப் படை தலைமையகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வழியில் அமைந்து இருக்கிறது சுனேரிபாக் மசூதி. முகலாயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு வரலாற்று சான்றாக டில்லியின் முக்கிய பகுதியில் காட்சி தரும் இந்த மசூதியில் தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மத ரீதியாக மட்டுமின்றி இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றின் முக்கிய சின்னமாகவும் இது இருந்து வருகிறது.
கடந்த 1930 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக முழு தேச விடுதலை என்ற கோரிக் கையை வலியுறுத்தி இங்குலாப் ஜிந்தாபாத் என்ற சுதந்திர முழக் கத்தை முதலில் முழங்கிய
ஹஜ்ரத் மொஹானியின் வசிப்பிடமாகவும் இந்த மசூதி இருந்தது. சுதந்திர போராட்ட காலத்திலும், டில்லி 1912 ஆம் ஆண்டு காலணி யாத்திக்கத்தின் போது மறுகட்ட மைப்பு செய்யப்பட்ட போதும் இந்த மசூதியின் மீது கைவைக்க வில்லை. இந்த நிலையில்தான் இந்த மசூதிக்கு தற்போது மிகப் பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. புது டில்லி நகராட்சி கவுன்சில் பள்ளிவாசல் நிர்வாகத் துக்கு அனுப்பிய நோட்டீஸ்தான் அது. டில்லியில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் வாகனங் களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், மசூதி அமைந்து இருக்கும் பகுதியில் போக்குவரத் திற்கு சிக்கல் உள்ளதாகவும் கூறி அதை இடிக்கப்போவதாக அந்த நோட்டீசில் குறிப்பிட்டு உள்ளது. ழிஞிவிசி எனப்படும் புதுடில்லி நக ராட்சி கவுன்சில் டில்லியை நிர்வ கிப்பதற்காக ஒன்றிய அரசால் உரு வாக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படும் அமைப்பாகும்.
இந்த மசூதியை இடிப்பதற்கு திட்டமிடப்படுவதாக செய்தி கிடைத்தவுடன் டில்லி உயர்நீதி மன்றத்தை மசூதி நிர்வாகம் அணுகி பாதுகாப்பு கோரியது. இதற்கு டில்லி உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்ததை தொடர்ந்து ழிஞிவிசி இந்த நோட்டீசை அனுப்பி இருக்கிறது. இது மசூதி நிர்வாகத்தினர், இஸ்லாமியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மத்தி யில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மசூதியை இடிப் பது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை ஈ மெயில் மூலம் தெரிவிக்கலாம் என்று செய்தித் தாள்களில் ழிஞிவிசி விளம்பரமும் செய்து இருக்கிறது. டில்லி மேம்பாட்டு ஆணைய சட்டம் 1962 இன் கீழ் இந்த மசூதி பாதுகாக்கப்பட்ட நினைவு சின்ன மாக அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இதனை இடிக்கும் முடிவு அதிர்ச்சியளிப்பதாக பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதேபோல் வக்ப் சட்டப்படி அதன் சொத்துகளை விற்கவோ, லீசுக்கு விடவோ அல் லது மறு கட்டமைப்பு செய் திடவோ அனுமதி இல்லை என்று கூறுகிறார்கள். அதே சமயம் டெல்லி போக்குவரத்து காவல் துறை இந்த மசூதியால் போக்கு வரத்துக்கு எந்த மாதிரியான பாதிப்பு ஏற்படுகிறது?” என்ற எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment