24.1.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ பீகார் மேனாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு.
♦ தான் மேற்கொள்ளும் நீதிப் பயணத்தில் மம்தா, நிதிஷ் கலந்து கொள்வர் என ராகுல் அறிவிப்பு.
♦ வரும் பிப்ரவரி மாதம் முதல் ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் தெரிவித்தார்.
டெக்கான் கிரானிக்கல் சென்னை:
♦ எல்லா வகையிலும் மக்களை மோடி அரசு துன்புறுத்தி வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.
♦ பெண்கள் மேம்பாட்டுக் கொள்கை குறித்து நடைபெற உள்ள சட்டசபைக் கூட்டத்தில் அரசு அறிவிக்கும் என தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ உலகமே உண்மைக்கு எதிராக நின்றாலும் நான் அஞ்சாமல் உண்மைக்காகப் போராடுவேன்; அசாமில் தடை ஏற்படுத்துவதன் மூலம் பாஜக தனது பயணத்திற்கு விளம் பரம் பெற உதவுவதால் தாம் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ராகுல் காந்தி பேச்சு.
தி டெலிகிராப்:
♦ ஏப்.16ஆம் தேதி மக்களவை தேர்தல் தேதி என்று குறிப்பிட்டு, அதற்கு ஏற்றவாறு தேர்தல் தொடர்பான அத்தனை திட்டங்களையும் வகுக்கும்படி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு டில்லி தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய சுற்றறிக்கை வெளியானதால் பரபரப்பு. இதில் உண்மை இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி ஆணையம் விளக்கம்.
♦ அனைத்தும் அதானி வசம்:அதானி தொடர்பான வழக்கினை உச்ச நீதிமன்றம் பட்டியலிட அறிவுறுத்திய நிலையில், வழக்கை பட்டியலிட வேண்டாம் என தனக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உதவி பதிவாளர் கூறியதை மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார். உடன் இது குறித்து விசாரிக்கப்பட்டு, வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என நீதிமன்றம் அறிவிப்பு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
♦ அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், மத மற்றும் மொழி சிறுபான்மை சமூகத்தினருக்கு கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும், நிர்வகிப்பதற்கும் உள்ள அடிப்படை உரிமையை அக்கல்வி நிறுவனங்களின் பட்டங்கள், உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களின் தேவைகள் மற்றும் அரசு உதவி ஆகியவற்றை இயற்றும் நாடாளுமன்ற சட்டங்களுக்கு அடிபணிய வைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
– குடந்தை கருணா
No comments:
Post a Comment