அகில இந்திய பகுத்தறிவாளர் கூட்டமைப்பு தலைவர் நரேந்திரநாயக் பங்கேற்பு
திருச்சி, ஜன. 20- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத் தலுக்கு இணங்க திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறை 2024 ஜனவரி 20, 21 ஆகிய நாட்களில் திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெறுகிறது.
20.1.2024 சனி காலை 10 மணி அளவில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பகுத்தறிவா ளர் கழக பொதுச் செயலாளர் வி.மோகன் தலைமையேற்று உரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வா.தமிழ் பிரபாகரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், பகுத்தறி வாளர் கழக துணை பொதுச் செயலாளர் அண்ணா. சரவ ணன், பகுத்தறிவாளர் கழக துணை பொதுச்செயலாளர் முனைவர் மு.சு. கண்மணி, பகுத்தறிவாளர் கழக துணை பொதுச் செயலாளர் புதுச்சேரி இளவரசி சங்கர், பகுத்தறிவாளர் கழகம் மாநில அமைப்பாளர் புதுச்சேரி ரஞ்சித்குமார், மந்தி ரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளர் கள் மதுரை சுப.பெரியார்பித்தன், திண்டுக்கல் ஈட்டி கணேசன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினார்.
திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பா ளர் இரா.ஜெயக்குமார் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
திராவிடர் கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஒருங்கிணைப்பாளர் எழுத்தா ளர் வி.சி.வில்வம் பயிற்சிப் பட் டறையின் நோக்கவுரையாற்றி னார்.
சிறப்பு அழைப்பாளர் அகில இந்திய பகுத்தறிவாளர் கூட்ட மைப்பு தலைவர் நரேந்திரநாயக், மந்திரமா? தந்திரமா? பயிற்சியை தொடங்கி பவர் பாயிண்ட் விளக்கத்துடன் பயிற்சி அளித் தார்.
நிகழ்வில் தலைமை கழக அமைப்பாளர் சென்னை கோபால் உட்பட கழக பொறுப் பாளர்கள் பங்கேற்றனர்.
மந்திரமா? தந்திரமா? பயிற்சியில் 45 மாணவர்களும் 15 பொறுப்பாளர்கள் உட்பட 60 நபர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஜனவரி 20, 21 இரண்டு நாட் களுக்கும் தொடர்ந்து வகுப்பு கள் நடைபெற்று வருகின்றன.
No comments:
Post a Comment