புதுடில்லி, ஜன.5 அமைச்சரவையில் ஒருவர் இருக்க வேண் டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மாநில முதலமைச்சருகே உள்ளது. அதில் தலையிட ஆளு நருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் இன்று (5.பு.சு0சு3) அதை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
தமிழ்நாடு மேனாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் சாரம் மற்றும் மது விலக்கு என இரு முக்கிய துறைகளைக் கவனித்து வந்தார்.
இந்தச் சூழலில்தான் கடந்த மே மாதம் முதலில் அமலாக்கத்துறை அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். தொடர்ந்து ஜூன் மாதம் அமலாக்கத் துறையினர் சோதனை செய்த நிலையில், அன்றிரவே அவர் கைது செய்யப்பட்டார். சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அன்றைய தினம் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட அவர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய பிரச்சினை இருந்த நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை யும் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரது வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத் தில் நடந்து வரும் நிலையில், அவர் மீது புசு0 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அவர் பிணை பெறக் கடுமையாக முயன்றபோதிலும் அவருக்குப் பிணை கிடைக்கவில்லை. இதற்கிடையே அவரது நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் (4.பு.சு0சு4) அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரது நீதிமன்ற காவல் ஜன.புபு ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க, செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தில் செந்தில் பாலாஜி கைதாகியுள்ள போதிலும், அவர் இன்னும் இலாகா இல்லாத அமைச்சராகவும் நீடிக்கிறார். ‘‘அவர் எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார்” என்று விளக்கம் கேட்க உத்தரவிடுமாறு சென்னை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
செந்தில் பாலாஜியை அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும்,அவரை பதவிநீக்கம் செய்த ஆளுநர் உத்தரவை நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்குரைஞர் எம்.எல்.ரவி என்பவர் வழக்குத் தொடர்ந்து இருந்தார். இருப்பினும், இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்ற சென்னை உயர்நீதிமன்றம், செந்தில் பாலாஜி அமைச்சர வையில் நீட்டிப்பது குறித்து முதலமைச்சரே முடிவு செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது. இதற் கிடையே சென்னை உயநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் எம்.எல்.ரவி மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு இன்று (5.1.2024) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல்புயன் ஆகியோர் அமர்வு இன்று விசாரணை செய்தது. இதற்கிடையே செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கை சரியானது என்றும், அதில் உச்சநீதிமன்றம் தலையிடத் தேவையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி இலாகா இல்லாத அமைச்சராகச் செந்தில் பாலாஜி தொடர தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment