மம்தா விரைவில் குணமடைய
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை,ஜன.25- மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா சென்ற கார் விபத்தில் சிக்கியதால் அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பர்தாமனில் இருந்து கொல்கத்தாவுக்கு சாலை வழியாக சென்று கொண்டிருக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மம்தா விரைவில் குணமடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கொல்கத்தாவில் மம்தா சென்ற கார் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். காயமடைந்த அவர் விரைவில் குணமடைய வாழ்த்து கிறேன்.என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment