மும்பை, ஜன.5- மராட்டிய மாநிலம் ஷீரடியில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மேனாள் அமைச்சருமான ஜிதேந்திர அவாத் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
கடவுள் ராமன் சைவ உணவு சாப்பிட்டவர் அல்ல. அசைவ உணவு சாப்பிட்டவன். ராமன் காட்டில் வேட்டையாடி சாப்பிட்டவன். அவர் பகுஜன மக்களான எங்களுக்கு சொந்தமானவர். நீங்கள் (பா.ஜன தாவை போன்றவர்கள்) தான் எங் களை சைவ உணவு சாப்பிடுபவர் களாக மாற்றினீர்கள். ஆனால் நாங்கள் ராமனைப் பின்பற்றி இறைச்சி சாப் பிடுகிறோம். 14 ஆண்டுகள் வனத்தில் வாழ்ந்த ராமனுக்கு எப்படி சைவ உணவு கிடைத்து இருக்கும்?-
இவ்வாறு அவர் பேசினார்.
ஜிதேந்திர அவாத்தின் பேச்சு சர்ச் சையை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜனதா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் ஜிதேந்திர அவாத்துக்கு கண் டனம் தெரிவித்து உள்ளன. ராமன் தொடர்பான பேச்சுக்கு ஜிதேந்திர அவாத்தை கண்டித்து தானே உள் ளிட்ட இடங்களில் போராட் டங்கள் நடந்தன.
இதற்கிடையே தனது பேச்சு யாரையாவது காயப்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக ஜிதேந்திர அவாத் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment