இசுலாமியர்களை பாதிக்கச் செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களவைத் தேர்தலுக்கு முன் வருமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 5, 2024

இசுலாமியர்களை பாதிக்கச் செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களவைத் தேர்தலுக்கு முன் வருமாம்!

featured image

புதுடில்லி, ஜன. 5- குடியுரிமை திருத்த சட்ட விதிகள் தயாராகி விட்டதாகவும் மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக இது குறித்த அறிவிக்கை வெளி யாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

குடியுரிமை திருத்த சட்ட (சிஏஏ) மசோதா கடந்த 2019ஆ-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடா ளுமன்றத்தில் நிறைவேறியது. இதையடுத்து இந்த சட்டம் 2020-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரு வதாக இருந்தது. எனினும் இதற் கான விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு இந்த சட்டம் அமல்படுத் தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த சட்டம் இதுவரை அமலாகவில்லை.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், சிஏஏ சட்ட விதிமுறைகள் தயாராகி விட்ட தாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இது தொடர்பான அறிவிக்கை நாடா ளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக வெளியிடப்படும் என்றும் அந்த வட் டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ஒன்றிய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, “சிஏஏ சட்டத்தை அமல் படுத்த தனி இணையதளம் தொடங்கப்படும். அதன் மூலம் தான் அனைத்து நடை முறைகளும் மேற்கொள்ளப்படும். அதில், எந்தஆண்டில் இந்தியா வில் (பயணஆவணம் இல்லாமல்) தஞ்சமடைந்தோம் என்பதை மனு தாரர்கள் குறிப்பிட வேண்டி இருக் கும். இதற்காக எந்த ஆவண மும் கேட்கப்பட மாட்டாது” என்றார். பாகிஸ்தான், ஆப்கா னிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறு பான்மையினராக வசிப்பவர்கள், மத ரீதியிலான துன்புறுத்தல் காரண மாக அங்கிருந்து வெளியேறி இந் தியாவில் அகதிகளாக தஞ்சம டைந்த வர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய் கிறது. குறிப்பாக, இந்த 3 நாடுகளி லிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து,

சீக்கியம், பவுத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய 6 மதங் களைச் சேர்ந்தவர்கள் இதன் மூலம் பயன் அடைவார்கள்.
ஆனால், இந்தச் சட்டத்தில் இசு லாமியர்கள் சேர்க்கப்பட வில்லை என்பதை சுட்டிக்காட்டி 2019 டிசம் பரில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டனர். அதன் பிறகு 2020-ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்று பரவியது. இதனால் விதிமுறை களை உருவாக் கும் பணி தாமத மாகி வந்தது. சிஏஏ சட்டத்தை அமல் படுத்த எதிர்க் கட் சிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரி வித்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment