சென்னையை அடுத்த கிளாம் பாக்கத்தில் தமிழ்நாடு அரசால் மிகச் சிறப்பாகக் கட்டப் பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய வளாகத்தில், அரசு விதிகளுக்கு எதிராகக் கோவில் ஒன்று கட்டப்பட்டு இருந்ததைச் சுட்டிக்காட்டி – அதனை அகற்றவேண்டும் என்று – ‘‘தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு…!” என்று ‘விடுதலை’யில் (9.1.2024) முதல் பக்கத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
சட்டப்படியான நமது கோரிக்கையை ஏற்று, அக்கோவில் அகற்றப்பட்டுவிட்டது என்ற செய்தி அறிந்து, சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
– கி.வீரமணி,
புரவலர், பகுத்தறிவாளர் கழகம்
No comments:
Post a Comment