1.1.2024
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
•நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும் சுயமரியாதைதான் முக்கியம். அதன்பிறகுதான் பதக்கமும், மரியாதையும். பாகுபலி என தன்னை கூறிக் கொள்ளும் ஒருவரிடமிருந்து கிடைத்த அரசியல் பலன், இந்த துணிச்சலான மகள்களின் கண்ணீரை விட அதிகமானதா? பிரதமர் தேசத்தின் காவலர். ஆனால் இதுபோன்ற கொடுமையில் அவரின் பங்கும் இருப்பது வேதனை தருகிறது’ என காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
• கூட்டணி கட்சிகளுடன் பொதுத்தேர்தல் தொகுதி உடன்பாடு, பொங்கலுக்கு பிறகு நடத்திட திமுக முடிவு.
தி ஹிந்து:
• மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நான் நம்பவில்லை என்று 2003ஆம் ஆண்டு முதல் கூறி வருகிறேன் என்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங்
டைம்ஸ் ஆப் இந்தியா:
• 2024 மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘இந்தியா’ கூட்டணியில் உறுப்பினராக இருப்ப தால், தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு எந்தத் தொகுதிகள் வந்தாலும் அக்கட்சி வலுவான போராட் டத்தை நடத்தும் என்றார்.
• வேட்பாளராக போட்டியிடும் ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்றது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செய லாகும். எனவே, ராஜஸ்தானில் அமைச்சராக நியமிக்கப்பட்ட அமைச்சர் சுரேந்திர பால் சிங்கை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்.
– குடந்தை கருணா
No comments:
Post a Comment