சென்னை, ஜன.3- கோவையில் உள்ள தமிழ் நாடு வேளாண்மைப் ப ல் கலைக்கழகத்தில், இளங் கலை வேளாண்மை பட் டப் படிப்பு பயிலும் — பொருளாதாரத்தில் நலிவுற்ற 15 மாற்றுத் திறனாளி மாணவ / மாணவிகளுக்கு வருடந் தோறும், நான்கு ஆண் டுகள் படிப்பிற்கான முழு கல்விக் கட்ட ணத்தை வழங்க சக்தி மசாலா நிறுவனத்தின் ஓர் அங்கமாகிய சக்தி தேவி அறக்கட்டளை, முன் வந்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, நடப்பு கல்வி ஆண்டில் முதல் ஆண்டு இளங்கலை வேளாண்மை படிப் பினைப் பயிலும் 15 மாண வர்களுக்கு, அண்மையில் வேளாண்மைப் பல் கலைக் கழகத்தில் நடந்த எளிய விழாவில் மொத் தம் ரூ.4,69,500-க்கான வரை வோலைகளை கல்வி உதவித் தொகையாக வழங் கியது.
இந்நிகழ்ச்சியில் இந் நிறுவனங்களின் நிறுவ னர்கள் மற்றும் சக்திதேவி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் டாக்டர் பி.சி.துரைசாமி மற்றும் டாக்டர் சாந்தி துரை சாமி, கோவை, வேளாண் மைப் பல்கலைக்கழகத் தின் துணை வேந்தர் டாக்டர் வி. கீதாலட்சுமி, பதிவாளர் டாக்டர் ஆர். தமிழ் வேந்தன், கல்லூரி யின் முதல்வர் டாக்டர் என்.வெங்கடேச பழனி சாமி, ஒருங்கிணைப்பா ளர் டாக்டர் பி.ஜி.கவிதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவல கப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment