சென்னை, ஜன.13- தமிழ்நாடு அரசு சார்பில் பெரியார், அம்பேத்கர் விருது கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதே போன்று தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குப் பணியாற்றிய ஏழு பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட் டுள்ளன. இந்த விருதுகளை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.1.2024) வழங்குகிறார்.இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப் பட்ட அறிவிப்பு:
சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பு செய்யும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2023-ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விரு துக்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு வின் தலைவர் சுப.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருபவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2023-ஆம் ஆண்டுக் கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினருமான பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதாளர்க ளுக்கு விருதுத் தொகையாக ரூ.5 லட் சத்துடன், தங்கப் பதக்கமும், தகுதியுரை யும் வழங்கப்படும்.
படைப்பாளிகளுக்கு விருது: தமிழுக் கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண் டாற்றும் நபர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருக் குறளின் பெருமையை உலகறியச் செய்து வரும் தவத்திரு பாலமுருகன டிமை சுவாமிகளுக்கு, 2024-ஆம் ஆண் டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேனாள் முதலமைச்சர் அண்ணா வின் முதன்மைத் தொண்டர் என பாராட்டப்பட்டவரும், இளவயது முதல் திராவிட இயக்கத்தில் ஈடுபட்டு வருபவருமான பத்தமடை பரமசிவத் துக்கு, 2023-ஆம் ஆண்டுக்கான பேர றிஞர் அண்ணா விருதும், தேசிய தமிழ்க் கவிஞர் பேராயம் உருவாக்கிய மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உ.பல ராமனுக்கு, பெருந்தலைவர் காமராசர் விருதும் வழங்கப்படவுள்ளது.
சிறப்பான கவிதைகள், திரைப்படப் பாடல்களைப் படைத்த பழனிபாரதிக்கு மகாகவி பாரதியார் விருதும், தனித் தமிழ் வேட்கை அகலாமல் பணியாற்றி வரும் எழுச்சிக் கவிஞர் ம.முத்தரசுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும், வரலாற்று நூல்களை எழுதியவரும், சோழ மண்டல கடற்கரையை முழுமையாக ஆய்வு செய்தவருமான எஸ்.ஜெயசீல ஸ்டீப னுக்கு தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் தமிழ் இலக்கணத்தை எளிமையாக கற்கும் வகையில் பாடல் களாக அளித்திட்ட முனைவர் இரா.கருணாநிதிக்கு, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருதும் வழங்கப் படவுள்ளது. விருதாளர் ஒவ்வொருவ ருக்கும் விருதுத் தொகையாக ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரையும் அளிக்கப்படும். இந்த விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் இன்று (13.1.2024) வழங்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment