சமூக நீதிக்கு மீண்டும் மரண அடி
உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறை கிடையாதாம்!
யுஜிசி பரிந்துரைக்கு அமைச்சர் கண்டனம்
சென்னை,ஜன.29- உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள பதவி களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பெறுவதற்கு போதிய விண்ணப்ப தாரர்கள் இல்லாவிட்டால் பொதுப்பிரிவில் இடங்களை நிரப்புவதற்கான யுஜிசியின் பரிந்துரைக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று (28.1.2024) விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜகவின் “சப் கா விகாஸ்” (அனைவரின் வளர்ச்சிக்காக) என்பதின் உண்மை முகம் இது தான். இதுவரை காலைப் பிடித்து இழுத்தவர்கள் இப்போது உச்சந்தலையில் கை வைத்து விட்டார்கள். இந்திய நாட்டில் சமத்துவத்தை ஏற் படுத்த வேண்டும் என்ற நோக் கில் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீட்டு கொள்கையை கொலை செய்வதற்கான சம் மட்டி அடி இது.
ஏற்கெனவே நாடு முழுக்க பல கல்லூரிகள் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட சமூக, பழங்குடியின மாணவர்களுக்கும், விண்ணப்பதாரர்களுக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களை பொதுப்பிரிவினருக்கு தாரை வார்க்கின்றனர் என்ற குற்றச் சாட்டுகள் தொடர்ந்து இருக் கின்றன. இந்த தவறான போக்கை சரிசெய்ய நாம் கோரிக்கை வைத்தால், பாஜகவோ அந்த தவறையே நிறுவனமயப்படுத்து கிறது. இந்தியாவில் வாழும் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக, பழங்குடியின மாணவர்களுக்கும், விண் ணப்பதாரர்களுக்கும் வஞ்சகம் செய்து பாமர மக்களை அழித்து ஒழிக்கும் பாஜகவின் முயற்சியை சமத்துவம், சமூக நீதியில் நம்பிக்கை கொண்ட அனை வரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment