தயார் நிலை
மக்களவை தேர்தலுக்கான தயார் நிலை குறித்து ஆய்வு செய்யும் வகையில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதி காரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் டில்லியில் நடைபெற்று வருகிறது.
பருவமழை
தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை வரும் 15ஆம் தேதி விலக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
எச்சங்கள்
வானியல் ஆய்வுக்கான எக்ஸ்போ சாட் செயற்கைக் கோள் வாயிலாக காசியோபியா-ஏ எனும் விண்மீன் வெடிப்பு எச்சங்கள் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
அகற்றம்
எண்ணூரில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது. இதுவரை 2.20 லட்சம் லிட்டர் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
முடிவுகள்
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6,151 பணியிடங்களுக்கான குரூப்-2 முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வெளி யிட்டுள்ளது.
கூடாது
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
பெண் காவலர்களுக்கு…
வெளி மாவட்ட பெண் காவலர்கள் தங்குவதற்காக, சென்னையில் புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்து வைத்தார்.
தேர்தல் பிரிவு
மக்களவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளதால், இதையொட்டி தேர்தல் தொடர்பான விகாரங்களை கவனிப்பதற்காகவே தமிழ்நாடு காவல் துறையில் தேர்தல் பிரிவு என்ற புதிய பிரிவு தொடங்கப் பட்டுள்ளது.
அரசாணை
தமிழ்நாடு அரசு சார்பில் உலக வங்கி நிதியுதவியுடன் கடற்கரை சுற்றுச் சூழலை பாதுகாக்க ரூ.1,675 கோடியில் ‘நெய்தல் மீட்சி இயக்கம்’ திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அனுமதியில்லை
2024-2025ஆம் ஆண்டு முதல் உயர்கல்வி நிறுவனங்களுக்கு 2 ஆண்டு சிறப்பு பி.எட். படிப்புக்கு அங்கீகாரம் வழங்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 4 ஆண்டு பி.எட். படிப்புக்கான பயிற்சிப் பாடங்களை வடிவமைக்கும் பணி நடந்து வருவதாக இந்திய மறுவாழ்வு குழுமம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment