தீயணைப்புத் துறையில் முதல் பெண் இயக்குநர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 1, 2024

தீயணைப்புத் துறையில் முதல் பெண் இயக்குநர்

featured image

சென்னை, ஜன.1– தமிழ்நாடு அரசின் தீயணைப்புத் துறை இணை இயக்குநர் என்.பிரியா வுக்கு, முதல் முறையாக மாநில அரசு அல்லாத குடிமைப்பணிகள் ஒதுக்கீட்டில் அய்.ஏ.எஸ். தகுதியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.

தமிழ்நாடு தீயணைப்புத் துறை இணை இயக்குநராக இருப்பவர் என்.பிரியா ரவிச்சந்திரன். இவர் கடந்த 2012ஆ-ம் ஆண்டு சேப் பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள கல்சா மகாலில் ஏற்பட்ட தீவிபத்தின் போது, தீயணைப்பு பணிகளில் ஈடுபட்ட நிலையில், காயமடைந்தார்.
கடந்த 2003ஆ-ம் ஆண்டு குரூப் 1 பணிக்கு தேர்வு செய்யப்பட்ட பிரியாவுக்கு, தற்போது மாநில அரசு அல்லாத குடிமைப் பணிகள் ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு அய்.ஏ.எஸ். தகுதி வழங்கியுள்ளது.

மாநில அரசில் காலியாக உள்ள இடங்களின் அடிப் படையில் ஒன்றிய அரசு ஆண்டு தோறும், குரூப் 1 அதிகாரிகளுக்கு மாநில அரசு பரிந்துரை அடிப் படையில், அய்.ஏ.எஸ். அதிகாரிக் கான தகுதியை வழங்கி வருகிறது.

அந்த அடிப்படையில் 2022ஆ-ம் ஆண்டுக்கான அய்.ஏ.எஸ். அதிகாரி யாக பிரியா ரவிச்சந்திரனை தேர்வு செய்து, இதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசு பிறப்பித் துள்ளது.
தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் அய்.ஏ.எஸ். அதிகாரி தகுதிக்கு உயர்த்தப் பட்டுள்ளது தமிழ்நாட்டில் இது முதல் முறையாகும்.

No comments:

Post a Comment