இந்த ஆண்டு கும்பமேளா, ராமர் கோவில் திறப்பு, வாரணாசி திருவிழா என லட்சக்கணக்கான மக்கள் கூடும் விழா நடக்க உள்ளது. இதற்காக ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கானோர் பயன்படுத்தும் வகையில் வாரணாசியில் திறந்தவெளிக் கழிப் பறைகள் கட்டப் பட்டுள்ளன.
ஒரு வரிசையில் 100 பேர் பயன்படுத்தும் வகையில், 8 வரிசைகள் அதாவது ஒரே நேரத்தில் 800 பேர் கழிப்பறையைப் பயன்படுத்துவார்கள். அந்தக் கழிவுகள் எல்லாம் கால்வாய்கள் போல் தோண்டப்பட்டுள்ள நீண்ட குழிகளில் சேகரிக் கப்படும். அந்தக் குழிகளில் தேங்கும் கழிவுகளை கால்வாயில் கலந்துவிட எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை.
இவ்வளவுக் கழிவுகள் கால்வாயில் செல்லும் வகையில் கட்டினால் கங்கை நாற்றம் எடுத்து நாசமாகிவிடும். (ஏற்கெனவே கங்கை ஒரு சாக்கடை என்பது தெரிந்த விடயம் – தொழிற்சாலைகளின் கழிவுகள் எல்லாம் கங்கையில்தானே!) கழிவுகளை அள்ளுவதற்கான வாகனங்கள் வர முடியாத வகையில் செய்யப்பட்டுள்ளது. மனிதர்களே இவ்வளவு மனிதக் கழிவுகளை குழியில் இறங்கி அள்ளி, வெளியில் நிற்கும் வாகனத்தில் சென்று கொட்டும் வகையில்தான் இதனைக் கட்டி வருவதாகத் தெரிகிறது.
இது என்ன மனித வதை!
கோடிக்கணக்கில் பக்தர்கள் திரளுவார்கள் என்று
ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டு,
அவர்களின் அடிப்படைத் தேவையான கழிப்பறைகளைக்கூட சரியாக செய்ய முடியாததும் மிகப்பெரிய அவலமே!
– கருஞ்சட்டை-
Friday, January 5, 2024
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment