சென்னையில் ரூ.2005 கோடி செலவில்
குடிநீர் ஆதாரங்களை ஒருங்கிணைக்கும் திட்டம்
திட்ட அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கும் அய்.அய்.டி.
சென்னை, ஜன. 30- சென்னையில் கடந்த 2011ஆம் ஆண்டு எடுக்கப் பட்ட கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 4.6 கோடி ஆகும். நாகரிக முன்னேற்றம், பொருளாதாரம், காலநிலை மாற்றங்கள், தொழில் நுட்ப வளர்ச்சி என தற்போதைய நகர மக்களின் மதிப்பீடாக 10 கோடிக்கும் மேற்பட்டோர் வசிக்க லாம் என பல்வேறு ஆய்வு அறிக்கை மூலம் தெரிகிறது.
மக்களின் முக்கிய தேவையாக குடிநீர் விளங்குகிறது. சென் னையை பொறுத்தவரை 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. இதுதவிர குடிநீர் வாரியம் சார்பில் 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரிகள் மூலம் தினசரி 100 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய் யப்படுகிறது. பராமரிப்புப் பணிக ளுக்காக குடிநீர் நிறுத்தம் அல்லது நீர் ஆதாரங்கள் வறண்டு போனால் சென்னை வாசிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே அவர்களுக்கு சமமான நீர் விநியோகத்தை அளிக்கும் முயற்சியாக சென்னை குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் வாரியம் ரிங் மெயின் சிஸ்டம் என்ற புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அதன்படி, ரூ.2005 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதாவது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 426 சதுர கி.மீ பரப் பளவில் உள்ள சுமார் 94.4 கி.மீ வரை பெரிய அளவிலான குழாய் களை அமைக்க முடிவு எடுக் கப்பட்டுள்ளது.
அதன்படி, பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர் வோய் கண்டிகை, செம்பரம்பாக் கம், வீராணம் என ஆறு முக்கிய நீர் நிலைகளில் இருந்து பம்புகள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு இந்த புதிய குழாய் இணைப்புகள் மூலம் செலுத்தப்பட உள்ளன. இதன் மூலம் 11 விநியோக பகுதிகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து நீர் பொதுமக்களுக்கு அனுப்பப்பட உள்ளது. இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறிய தாவது:
தற்போது குடிநீர் விநியோகம் என்பது அந்தந்த நீர் ஆதார பகுதிகளில் இருக்கும் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் அளிக்கப் படுகிறது. குறிப்பாக, மீஞ்சூரில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலமாக வடசென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. சில சமயங்களில் நீர் வரத்து குறைவான காலங்களில் மாற்று நீர் ஆதாரங்கள் மூலமாக நீரை விநி யோகம் செய்வது சவாலாக உள் ளது. ஆனால், இந்த குழாய் இணைப்பு திட்டம் மூலமாக எந்த நீர் ஆதார பகுதிகளில் இருந்தும் விநியோகிக்க முடியும். குறிப்பாக வடசென்னைக்குட்பட்ட திருவொற்றியூர் மற்றும் மணலி மண்டலங்களுக்கு வீராணம் ஏரி மூலம் தண்ணீர் வழங்கப்படலாம். அதேபோல், இத்திட்டத்திற்கான விரிவான அறிக்கையை அய்அய்டி மூலம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் பெறலாம் என எதிர்பார்க்கிறோம்.
மேலும், இப்பணிகளை 30 மாதங் களுக்குள் முடிக்க திட்டமிட்டுள் ளோம். இத்திட்டம் மட்டுமின்றி சென்னையில் 763 சதுர கி.மீ நீளத் திற்கும், 107 கி.மீ நீளத்திற்கும் என ரூ.1830 கோடி மதிப்பீட்டில் மற் றொரு ரிங் மெயின் சிஸ்டம் அமைக் கும் திட்டத்தையும் தொடங்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment