பிலாஸ்பூர், ஜன. 30- சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் இந்துக் கடவுள்களை நம்பமாட்டோம் என மக்களை உறுதிமொழி ஏற்க வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பராரி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியின் ஆசிரியராக உள்ளவர் ரதலால் சரோவர், இவர் மாவட்ட கல்வி அதிகாரியால் 28.1.2024 அன்று இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கடந்த ஜனவரி 22 அன்று அயோத்தி கோயிலில் சிலை பிரதிஷ்டை நடைபெற்றபோது, சரோ வர், ரத்தன்பூர் காவல் நிலைய எல் லைக்குள்பட்ட மொங்ஹதராய் கிராமத்தில் மாணவர்கள் உள்பட ஒரு குழுவைக் கூட்டியுள்ளார்.
அந்த கூட்டத்தில் தலைமை ஆசிரியர் சிவன், ராமர், கிருஷ்ணர் உள்ளிட்ட இந்துக் கடவுள்களை வழிபடக்கூடாது, புத்த மதத்தைப் பின்பற்ற வேண்டும் என மக்களை உறுதிமொழி ஏற்கவைத்ததாக வலதுசாரி அமைப்பின் அதிகாரி ரூபேஷ் சுக்லா புகார் அளித்தார்.
சரோவரின் இந்த உறுதிமொழி காட்சிப்பதிவு மூலம் சமூக ஊட கங்களில் வைரலானதையடுத்து, ஸனாதன தர்மத்தைப் பின்பற்று பவர்களின் உணர்வுகளைப் புண் படுத்தியதாக தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Tuesday, January 30, 2024
கடவுளை நம்பமாட்டோம்: மக்களை உறுதிமொழி ஏற்கவைத்த தலைமை ஆசிரியர் கைதாம்!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment