ராகுல் காந்திக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி மனுதாரருக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 22, 2024

ராகுல் காந்திக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி மனுதாரருக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம்

புதுடில்லி, ஜன. 22- மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜ ராத் நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கி யது. இதைத்தொடர்ந்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக் கப்பட்டது.
அதேநேரம் ராகுல் காந்தியின் தண்ட னையை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்டு மாதம் உத்தர விட்டது. இதனால் அவர் மீண்டும் எம்.பி. யானார்.
ராகுல் காந்திக்கு மீண் டும் நாடாளுமன்ற உறுப் பினர் பதவி வழங்கும் வகையில் மக்களவை வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உத் தரபிரதேசத்தை சேர்ந்த அசோக் பாண்டே என் பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக் கல் செய்தார்.
இதை நீதிபதிகள் கவாய், சந்தீப் மேத்தா அமர்வு விசாரித்து, மனுவை 19.1.2024 அன்று தள்ளு படி செய்தது. இந்த வழக்கு 2 முறை விசாரணைக்கு வந்தபோதும், மனுதாரர் அசோக் பாண்டே நீதி மன்றத்தில் ஆஜராக வில்லை என குற்றம் சாட்டிய நீதிபதிகள், இது போன்ற அற்பமான மனுவை தாக் கல் செய்ததற்காக அவ ருக்கு ரூ.1 லட்சம் அபரா தமும் விதித்தனர்.
முன்னதாக அசோக் பாண்டே கடந்த ஆண் டும் இதுபோன்ற 2 மனுக் களை அடுத்தடுத்து தாக் கல் செய்திருந்தார். அவற் றுக்கும் முறையே ரூ.5 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் என உச்சநீதி மன்றங்களில் அபராதம் விதித்திருந்தது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment