தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடைபெற்ற
தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டம்
தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டங்கள் தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடை பெற்றன. அதன் விவரம் வருமாறு:
வேப்பம்பட்டி – அரூர்
அரூர் கழக மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறி வாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் அய்ம்பதாம் ஆண்டு நினைவு நாள், இறுதி முழக்க பரப்புரை பொதுக்கூட்டம் 7-1-2024 அன்று மாலை 5 மணி அளவில் வேப்பம்பட்டி பேருந்து நிலையத்தில் நடை பெற்றது.
இசை நிகழ்ச்சி
துவக்கத்தில் திராவிடர் கழக கலை நிகழ்ச்சியாளர், கொள்கை பாடகர் திருத்தணி பன்னீர் செல்வம், நாகூர் அனிபா குரல் சேலம் ஜான் பாஷா குழுவினர் இணைந்து வழங்கிய இசை பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அம்பேத்கர் சிலைக்கு மாலை
வேப்பம்பட்டி பேருந்து நிலையத்தில் நிறுவப் பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகம், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் ஊர் பொது மக்கள் ஒன்றிணைந்து பறையிசையுடன் ஊர்வலமாக சென்று தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெய ராமன், தருமபுரி மாவட்ட செயலாளர் பெ. கோவிந்தராஜ் ஆகியோர் கொள்கை முழக்கமிட திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
பொதுக்கூட்டம்
“தந்தை பெரியார் இறுதி நாள் முழுக்க பரப்புரை” பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு தருமபுரி மாவட்ட கழக காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன் தலைமையேற்று நடத் தினார். மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் தீ. சிவாஜி வரவேற்று உரையாற்றினார்.
மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி, மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணா நிதி, விடு தலை சிறுத்தைகள் கட்சி எம். ராஜேந்திரன், பகலவன், அரூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலா ளர் என். டி. குமரேசன், கவிஞர் பிரேம்குமார், அரூர் நகர் பகுத்தறிவாளர் கழக செயலாளர் ராமகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
சிறப்பித்தல்
கழக பாடகர் திருத்தணி பன்னீர்செல்வம், சேலம் ஜான் பாஷா,மற்றும் கழக நிர்வாகிகளுக்கு நிகழ்ச்சி ஏற் பாட்டாளர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவரும், திமுக மாநில ஆதிதிராவிட குழு துணை செயலாளர் அரூர் சா. இராசேந்திரன், பயனாடையை அணிவித்து சிறப்பு செய்து தொடக்க உரையாற்றினார்.
மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்ல துரை, தருமபுரி மாவட்ட செயலாளர் பெ.கோவிந்தராஜ் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கதிர் செந்தில் குமார், ஆசிரியர் அணி பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர் பொன்முடி ஆகி யோர் கருத்துரையாற்றினர். தலைமைக் கழக அமைப் பாளர் ஊமை ஜெயராமன், மாவட்ட இளைஞரணி தலைவர் த. மு. யாழ் திலீபன் ஆகியோர் சொற்பொழிவு ஆற்றினர்.
சிறப்புரை
அதைத்தொடர்ந்து திராவிடர் கழக பொதுச்செயலா ளர் முனைவர் துரை. சந்திரசேகரன் சிறப்புரையாற்று கையில்: இங்கே திருத்தணி பன்னீர்செல்வம் ஜான் பாஷா ஆகியோர் இன்றைய நிலைக்கு ஏற்ப கொள்கை பாடல்களை சிறப்பாக பாடி உற்சாகப்படுத்தினார். வேப்பம்பட்டி கிராமத்திற்கு தந்தை பெரியார் அவர்கள் இரண்டு முறை வந்ததாக இங்கே குறிப்பிட்டார்கள். அத்தோடு அண்ணா அவர்களும் வருகை தந்து இந்த ஊரிலே பேசி இருக்கிறார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாட்டாளி மகனுக்கு திருமணம் செய்து வைத் திருக்கிறார். அந்த வகையில் வேப்பம்பட்டி கிராமம் சிறப்புக்குரியதாக உள்ளது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிமிழறிஞர் கலைஞர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய கொள்கை வழித தோன்றலாக அரூர் ராஜேந்திரன் திகழ்கிறார். திராவிடர் கழகத்திற்கு, எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ராஜேந்திரன். தமிழர் தலைவரால் நேசிக்கப்பட்டவர் ராஜேந்திரன், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் வாழக் கூடியவராக இருக்கிறார். எதிர்காலத்தில் சட்டமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு கூட அவருக்கு இருக்கிறது. தான் வாழ்ந்தால் மட்டும் போதாது தன் குடும்பம் வாழ்ந்தால் மட்டும் போதாது, என்று இந்தப் பகுதி மக்களுக்கு எல்லாம் உதவக் கூடியவராக, வழிகாட்டக் கூடியவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிற ராஜேந்திரன் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் பாராட் டையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்
தந்தை பெரியார் அவர்களையும், அண்ணல் அம் பேத்கர் அவர்களையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. வடக்கே தந்தை பெரியாரும், தெற்கே அம்பேத்கரும் என்பதைப் போல ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக திகழக்கூடியவர்கள். தந்தை பெரியார் அவர்களின் கருத்தும் அண்ணல் அம் பேத்கர் அவர்களின் கருத்தும் ஒத்த கருத்தாக இருக் கிறது. இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக திகழ்கிறார்கள். இருவருக்கும் ஒரே பொது எதிரி பார்ப் பனர்கள் மட்டுமே. அம்பேத்கர் எழுதிய ஆங்கில நூலை, மொழிபெயர்த்து தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார். ஆணாகப் பிறந்து பெண்களுக்காக பாடுபட்டவர், உயர்ந்த சமூகத்தில் பிறந்து கீழ்நிலை மக்களுக்காக பாடுபட்டவர், ஆன்மீகக் குடும்பத்தில் பிறந்து பகுத்தறிவு கருத்துகளை பரப்பியவர், மொத்தத் தில் மனித உரிமைக்காக பாடுபட்டவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லா மல் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக் களுக்காக சட்டம் முன்வடிவை எழுதியவர் அண்ணல் அம்பேத்கர். 8 மணி நேர வேலை திட்டத்தை நடை முறைப்படுத்தியவர் அம்பேத்கர். வைக்கம் போராட்டம் நடத்திய தந்தை பெரியாரை பின்பற்றி மகர் குளம் போராட்டத்தை நடத்தி காட்டியவர் அம்பேத்கர். இன்றைய மக்கள் சமுதாயத்திற்காக உழைக்கக் கூடியவர்கள் யார் என்பதை கண்டறியாமல் மதவாத சக்திகள் பின் போகிறார்கள். அவ்வாறு போனால் நாட்டிற்கு பேராபத்து ஏற்படும். தந்தை பெரியார் பிறந்த மண்ணில் ஒரு நாளும் மதவாத சக்திகள் காலூன்ற முடியாது. என்று குறிப்பிட்டதுடன், மக்கள் சிரித்து சிந்தித்துப் பார்க்கும் வகையில் மூடநம்பிக்கை ஒழிப்பு பகுத்தறிவுப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பங்கேற்றோர்
நிகழ்ச்சியில் திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அரூர் திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் என்.டி. குமரேசன்,கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேஷ், ஜலாவுதீன் தருமபுரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் கு.சரவணன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் பா.பெரியார், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் வேப்பிலைப் பட்டி சூர்யா, மகளிர் அணி சார்பில் கொலகம்பட்டி மணிமேகலை, வேப்பநத்தம் கல்பனா, பறையப்பட்டி வேல்விழி, அம்மாபேட்டை உமா, அஜிதா, சிறீபிரியா, ராகுல்,வேடியப்பன், பழனிசாமி,செல்வம், அன்பு செழியன், ரங்கசாமி சுரேஷ் குமார் இளம்பரிதி ரத்தினம் மாள் மற்றும் மாம்பாடி ஈட்டியம்பட்டி பொதுமக்கள் பங்கு பெற்றனர் வேப்பம்பட்டி கழகக் கொடி காடாக மாறியது. இறுதியாக பகுத்தறிவாளர் கழக செயலாளர் எஸ் சேகர் நன்றி கூறினார்.
புதுச்சேரி
புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 50 ஆவது நினைவு நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 07.01.2024 அன்று காலை 10.00 மணியளவில் புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் முன்னிலையில் எழுத்தாளர் மன்றத் துணைப் பொதுச்செயலாளர் இளவரசிசங்கர் வரவேற்புரை ஆற்றினார். பகுத்தறி வாளர் கழக மாநில அமைப்பாளர் கு.இரஞ்சித்குமார் நோக்கவுரை ஆற்றினார்.
போட்டிக்கான நடுவர்களாக அறிவியல் அறிஞர் கோ. தாமரைக்கோ, எழுத்தாளர் ந.மு.தமிழ்மணி, முனை வர். சிவ.இளங்கோ ஆகியோர்கள் செயல்பட்டனர். பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அவர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
பேச்சுப் போட்டியில்
1. பெரியார் என்றும் சமுதாய இருள் நீக்கும் சூரியன்,
2. பெரியார் ஒரு தொலை நோக்காளர்,
3. பெரியாரின் அறிவியல் பார்வையும் அணுகு முறையும். என்ற தலைப்புகளில் அய்ந்து மணித்துளிகளில் பேசுவதற்காக மாணவர்கள் கலந்து கொண்டு பேசினர்.
இதில் புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மாணவர் (முதலாமாண்டு மருத்துவம்) கு. தொல் காப்பியன் முதல் பரிசு ரூபாய் மூன்றாயிரம் பெற்றார். அவருக்கு திராவிடர் கழகக் காப்பாளர் இரா.சடகோபன் பயனாடை அணிவித்து பணப்பரிசு மற்றும் புத்தகம் வழங்கி சிறப்பித்தார்.
இரண்டாம் பரிசு கந்தசாமி கல்லூரி மாணவி பா. அபிலதா (இளம் அறிவியல் கணிதம் ) ரூபாய் இரண்டாயிரம் பெற்றார். அவருக்கு பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பா.குமரன் பயனாடை அணிவித்து பணப்பரிசு மற்றும் புத்தகம் வழங்கி சிறப்பித்தார்.
மூன்றாம் பரிசு அரசு சட்டக் கல்லூரி மாணவர் (அய்ந்தாமாண்டு) பொ. கணேஷ் ரூபாய் ஆயிரம் பெற்றார். அவருக்கு பகுத்தறிவாளர் கழக எழுத்தாளர் மன்ற துணைப் பொதுச் செயலாளர் இளவரசிசங்கர் பயனாடை அணிவித்து பணப்பரிசு மற்றும் புத்தகம் வழங்கி சிறப்பித்தார்.
பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாகப் பேசிய ஏழு நபர்கள் யு.நந்தினி, சி.சிவகாமி, வே.தீ.ரித்திக்கா,கோ.பிரபு, கே.நதியா, ப.ஹரிகரன் மற்றும் பெ.பிரவின் நரேஷ் ஆகியோருக்கு சிறப்புப் பரிசாக ரூபாய் நூறு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் துணைத் தலைவர் மு.குப்புசாமி, விடு தலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ.சிவராசன், ஊட கவியலாளர் பெ.ஆதிநாராயணன், களஞ்சியம் வெங்க டேசன், கு.உலகநாதன், மருத்துவர். கு.இராஜ்குமார், இர.சாம்பசிவம்,இள.கோவலன், கே.குமரேசன், சே.முகேஷ், கா.காவியா, பாஸ்கரன் ஆகியோர்கள் முன்னின்று செயற்பட்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் உட்பட அனைவருக்கும் மாவட்டத் தலைவர் வே.அன் பரசன் தந்தை பெரியார் படங்கள் அடங்கிய 2024 ஆம் ஆண்டின் மாதாந்திர நாள் காட்டியை வழங்கி சிறப் பித்தார். விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் தந்தை பெரியார் அவர்களின் 50ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி இராணியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பேச்சுப் போட்டிக்கு 1.பெரியார் என்றும் சமுதாய இருள் நீக்கும் சூரியன், 2.பெரியார் ஒரு தொலை நோக் காளர், 3.பெரியாரின் அறிவியல் பார்வையும் அணுகு முறையும் என மூன்று தலைப்புகளில் மாணவ-மாணவி யர் பேசினார்கள்.
அதே போல் போட்டிக்காக பேசுபவர்களின் குரல் வளம், கருத்து, பேச்சுநடை என்ற வகைகளில் மதிப் பெண்கள் நடுவர்களால் வழங்கப் பெற்றது. புதுக் கோட்டை மாவட்ட அளவில் இப்போட்டி நடத்தப் பட்டாலும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் வெளி மாவட்டங்களில் சென்று பயின்று வருபவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி, தஞ்சை கரந்தை தமிழ்க் கல்லூரி, கோவை அண்ணா பொறியியல் கல்லூரி, ஆகிய கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவியர் கலந்து கொண்டு தங்கள் பேச்சுத் திறமையை வெளிப்படுத்தினர்.
பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் பரிசான 3000 ரூபாயை புதுக்கோட்டை மாவட்ட ப.க. அமைப்பாளர் ஆசிரியர் தி.குணசேகரன் வழங்கினார். இந்தப் பரிசினை கோவை அண்ணா கல்லூரி மாணவர் சு.சுகநிலவன் பெற்றார். இரண்டாவது பரிசான 2000 ரூபாயை ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ச.ஆர்த்தி வழங்கினார். புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவி இரா.பபிதா பெற்றார். மூன்றாவது பரிசான 1000 ரூபாயை ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வி.பார்த்தசாரதி வழங்கினார். அதை கரந்தை தமிழ்க்கல்லூரி மாணவர் லியானி விஸ்வா பெற்றுக் கொண்டார். போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ-மாணவியருக்கும் நடுவர்களாக இருந்து போட்டியை நடத்திக் கொடுத்த சிறப்பு விருந்தினர்களுக்கும் நகரத் தலைவர் ரெ.மு.தரும ராசு புத்தகங்களை பரிசாக வழங்கிச் சிறப்பித்தார்.
பேச்சுப் போட்டியை திராவிட மாணவர் கழக மாநிலத் தலைவர் இரா.செந்தூரபாண்டியன், மாவட்ட கழகத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் அ.சரவணன், ப.க.மாவட்டத் தலைவர் அ.தர்மசேகர், ப.க.மாவட்டச் செயலாளர் இரா.மலர்மன்னன், ப.க.ஆசிய ரணி மாவட்டச் செயலாளர் இரா.வௌ;ளைச்சாமி, ப.க.மாவட்டத் துணைத் தலைவர் ஆ.கா.ஏழுமலை, ப.க.மாவட்டத் துணைச் செயலாளர் பி.தாமோதரன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் குட்டிவீரமணி, இளைஞரணிச் செயலாளர் தி.பொன்மதி, பொன்னமரா வதி ஒன்றியத் தலைவர் வீ.மாவலி, ஆகியோர் முன்னின்று நடத்தினர். ப.க.மாவட்டச் செயலாளர் மலர் மன்னன் நன்றி கூறினார்.
மும்பை
தந்தை பெரியார் அவர்களின் 50 ஆவது நினைவு நாள் நிகழ்வு 24.12.2023 மாலை 5 மணிக்கு பம்பாய் திருவள்ளுவர் மன்றம் சார்பில் பாண்டூப் பிரைட் உயர்நிலைப்பள்ளி வளாகத்துக்குள் இருக்கும் திரு வள்ளுவர் பூங்காவில் நடைபெற்றது. பம்பாய் திரு வள்ளுவர் மன்றத்தின் பொதுச்செயலாளர் ஜேம்ஸ் தேவதாசன் தந்தை பெரியார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில் மும்பை திராவிடர் கழகத்தலைவர் பெ. கணேசன், பகுத்தறிவாளர் கழகத்தலைவர் அ.இரவிச்சந் திரன் ஆசிரியர் எஸ் .எஸ் .தாசன்,புறநகர் திமுக பரப்புரையாளர் முகமது அலி ஜின்னா, மும்பை திமுக இலக்கிய அணி தோழர் வ.இரா.தமிழ் நேசன், மற்றும் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment