நாடா­ளு­மன்­ற தேர்­தலில் 'இந்­தியா' கூட்­டணி பெரும் வெற்­றி பெற வேண்டும் : அமைச்சர் உதயநிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 29, 2024

நாடா­ளு­மன்­ற தேர்­தலில் 'இந்­தியா' கூட்­டணி பெரும் வெற்­றி பெற வேண்டும் : அமைச்சர் உதயநிதி

featured image

சென்னை, ஜன.29 வரு­கின்ற நாடா­ளு­மன்­ற தேர்­தல் மிக மிக முக்­கி­ய­மான ஒரு தேர்­தல். இதில் இந்­தியா கூட்­டணி மிகப்­பெரிய வெற்­றியை பெற வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக இளை­ஞர் அணி­யின் மாவட்ட-மாந­கர-மாநில அமைப்­பா­ளர்­கள், துணை அமைப்­பா­ளர்­கள் ஆலோ­ச­னைக் கூட்­டம் சென்னையில் நடந்தது. கூட்டத்திற்கு இளை­ஞர் அணிச் செய­லா­ளர் அமைச்சர் உத­ய­நிதி ஸ்டாலின் தலை­மை­ தாங்கினார். இளை­ஞர் அணி­ மாநாட்­டில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களை நாடு முழு­வ­தும் எடுத்­துச் செல்­வது, ஒன்­றிய-நகர-பகுதி-பேரூர் நிர்­வா­கி­க­ளை தேர்வு செய்­வது குறித்து விவா­திக்­கப்­பட்­டது. கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

தேர்­தல் விரை­வில் வர இருக்­கி­றது. இன்­னும் நான்கு, அய்ந்து நாட்­க­ளில் அறி­விப்பு வந்­து­வி­டும். ஏப்­ரல் 14இல் இருந்து 18 வரை உள்ள ஏதா­வது ஒரு தேதி­யில் தேர்­தல் இருக்­கும் என்று தேர்­தல் தேதியே கிட்­டத்­தட்ட முடி­வா­கி­விட்­ட­தாக சொல்­கி­றார்­கள். இன்­னும் 55 முதல் 60 நாட்­கள் தான் நம்­மு­டைய கையில் இருக்­கி­றது. தேர்­தல் வேலை­க­ளை­யும் இளை­ஞர் அணி பணி­க­ளை­யும் நாம் சம­மாக செய்ய வேண்­டும். மாநி­லத் துணைச் செய­லா­ளர்­க­ளோடு கலந்து பேசி விரை­வில் ஒன்­றிய நகர பகுதி பேரூர் இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் நிய­ம­னம் செய்­யப்­ப­டு­வார்­கள். அதி­க­பட்­சம் பிப்­ர­வரி இறு­திக்­குள் அந்த அறி­விப்­பு­கள் வெளி­யா­கும்.

கலை­ஞர் நூற்­றாண்டை முன்­னிட்டு 234 தொகு­தி­க­ளி­லும் கலை­ஞர் நூல­கத்தை திறப்­பது, வரு­வாய் மாவட்­டம்­தோ­றும் மாரத்­தான் போட்­டி­களை நடத்­து­வது, பேச்­சுப்­போட்­டி­களை நடத்தி 100 இளம் பேச்­சா­ளர்­களை தி.மு.க. தலை­மைக் கழ­கத்­துக்கு தேர்வு செய்து தரு­வது என நம்­முன் பணி­கள் காத்­தி­ருக்­கின்­றன.

வரு­கின்ற நாடா­ளு­மன்­ற தேர்­தல் மிக மிக முக்­கி­ய­மான ஒரு தேர்­தல். ‘இந்­தியா’ கூட்­டணி மிகப்­பெரிய வெற்­றியை பெற வேண்­டும். அப்­போ­து­தான் மாநில உரி­மை­கள் மீட்பு என்­கின்ற நம்­மு­டைய மாநாட்­டின் லட்­சி­யத்தை அடைய முடி­யும். ‘வர இருப்­பது நாடா­ளு­மன்­றத் தேர்­தல் ­தானே’ என அலட்­சி­ய­மாக இருந்து விடக்­கூ­டாது. இந்ததேர்­த­லின் வெற்றி 2026 சட்­ட­மன்­றத் தேர்­த­லின் வெற்­றிக்கு வகை செய்­யும் வகை­யில் இருக்­க­வேண்­டும். களத்­தில் நாம் ஸ்ட்ராங் என்­பது தெரி­யும்.

இப்­போது களத்­தில் அர­சி­யல் செய்­வது எவ்­வ­ளவு முக்­கி­யமோ அதே அளவு சமூக வலைத்­த­ளத்­தி­லும் இயங்­கு­வது முக்­கி­ய­மா­கி­றது. மக்­க­ளி­டம் உண்மை சென்று அடை­வதை விட பொய், வதந்தி சீக்­கி­ரம் போய் சேர்ந்து விடு­கி­றது. ஆனால் நம்­மு­டைய இயக்­கத்­திற்கு மட்­டும்­ தான் வர­லாறு இருக்­கி­றது. தலை­வ­ரு­டைய வர­லாறு இருக்­கி­றது. இயக்­கத்­தின் வர­லாறு இருக்­கி­றது. கொள்­கை­யும் இருக்­கி­றது. ‘உங்­கள் கொள்கை என்­ன­வென்று’ அதிமுககார­ரி­டம் சென்று கேட்­டுப் பாருங்­கள். அவர்­க­ளுக்கு இருப்­பது ஒரே கொள்­கை­தான். அது, தி.மு.க-வை எதிர்ப்­பது மட்­டுமே. அதிமுக நிறு­வ­னர், கலை­ஞ­ரின் நெருங்­கிய நண்­பர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா 3 நாட்­க­ளுக்கு முன்பு நடந்­தது. திருப்­பத்­தூ­ரில் அந்த நிகழ்ச்­சிக்­காக ஒரு சுவரொட்டி அடிக்­கி­றார்­கள். அந்த சுவரொட்டியில் எம்.ஜி.ஆரின் ஒளிப்­ப­டத்­திற்கு பதி­லாக நடி­கர் அர­விந்த்­சா­மி­யின் ஒளிப்ப­டத்தை போட்டு விட்­டார்­கள். இந்த மாதி­ரி­யான ஒரு இயக்­கத்தை எங்­கே­யா­வது பார்த்­தி­ருக்­கி­றீர்­களா? எம்.ஜி.ஆர் யார்? நடி­கர் அர­விந்த்­சாமி யார் என்றே அவர்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை.

இவ்­வாறு அவர் பேசி­னார்.

No comments:

Post a Comment