வடக்குத்து -அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா கருத்தரங்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 13, 2024

வடக்குத்து -அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா கருத்தரங்கம்!

featured image

வடக்குத்து, ஜன. 13- வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம் மற்றும் தமிழர் தலைவர் நூலக வாசகர் வட்டம் சார்பில் தமிழர் திருநாள் விழா கருத்தரங்கம் 12.1.2024 அன்று மாலை 6 மணிக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் முனியம்மாள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட மகளிர் பாசறை தலைவர் தமி ழேந்தி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் குணசுந்தரி, சத் தியா, கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் “உறவு -உணவு- உணர்வு” எனும் தலைப்பில் பொங்கல் விழா சிறப்புகள் குறித்தும் தமிழர் திருநாள் விழாவை மக்கள் மயப்படுத்திய தந்தை பெரியாரின் தொண்டு குறித்தும் விளக்கி சிறப்புரை ஆற்றினார்.
மாவட்ட அமைப்பாளர் மணிவேல் நிகழ்வை ஒருங்கிணைத்தார். மாவட்டத் தலைவர் தண்டபாணி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் உதயசங்கர், மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் வேலு, வடலூர் செயலாளர் குணசேகரன், திராவிடன் இளை ஞர் அணி அமைப்பாளர் டிஜிட்டல் ராம நாதன், பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் செல்வம், ரேணு, சுமலதா, கவிஞர் தீபக், நெய்வேலி கோபாலகிருஷ்ணன், இந் திரா நகர் கிளை தலைவர் தங்க பாஸ்கர், மகளிர் அணி தோழர்கள் மங்கலலட்சுமி, மலர் கீதா, திராவிடமணி, வெண்மணி, செல்வ ராணி ஆகியோர் உரையாற்றினர். விஜயா கனகராஜ் நன்றி கூறினார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment