சேலம், ஜன. 5- சேலம் பெரியார் பல்க லைக்கழக முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த பேராசிரியர்கள் 5 பேருக்கு காவல் துறையினர் அழைப்பாணை அனுப்பி உள்ளனர்.
முறைகேடு புகார்
சேலம் அருகே உள்ள கருப் பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல் கலைக்கழகத்தில் துணைவேந்த ராக ஜெகநாதன் பணியாற்றி வரு கிறார். இந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங் கத்தின் சட்ட ஆலோசகர் இளங் கோவன் கருப்பூர் காவல்நிலையத் தில் புகார் ஒன்று கொடுத்தார்.
அதில், சேலம் பெரியார் பல் கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், இணைப்பேராசிரியர் சதிஷ் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம் கணேஷ் ஆகியோருடன் சேர்ந்து பூட்டர் அறக்கட்டளை என்ற தனியார் நிறுவனத்தை அரசின் அனுமதியில்லாமல் வணிக நோக் கத்துடன் தொடங்கினார். இது குறித்து கேட்டபோது என்னை திட்டியதுடன் மிரட்டலும் விடுத் தனர். எனவே முறைகேட்டில் ஈடு பட்ட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப் பட்டிருந்தது.
துணைவேந்தர் கைது
இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி துணை வேந்தர் ஜெகநாதன் உள்பட 4பேர் மீது வழக்குப்பதிவு செய்த னர். இதில்துணை வேந்தர் ஜெக நாதனை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் நிபந்தனையின் பேரில் பிணையில் அவர் விடுவிக் கப்பட்டார்.
இதனிடையே பெரியார் பல் கலைக்கழக வளாகத்தில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனின் வீடு, அலுவலகம், பதிவாளர் தங்க வேலுவின் அலுவலகம், இணைப் பேராசிரியர் சதீசின் வீடு, அலுவல கம், பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் மாளிகை மற்றும் சூரமங்கலம் பகுதி யில் உள்ள தங்கவேல் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் முறைகேடு புகார் தொடர்பாக மேலும் சிலரி டம் விசாரிக்க வேண்டும் என கோரி பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் காவல் துறை ஆணையர் விஜயகுமாரிக்கு பதிவு அஞ்சல் மற்றும் இணைய தளம் மூலம் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்து வதற்காக பேராசிரியர்கள் ஜெய ராமன், சுப்பிரமணிய பாரதி, ஜெயக்குமார் உள்பட 5 பேருக்கு கருப்பூர் காவல்துறையினர் அழைப் பாணை அனுப்பி உள்ளனர்.
No comments:
Post a Comment