மணிப்பூரில் எப்போதுதான் இயல்புநிலை திரும்பும்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 3, 2024

மணிப்பூரில் எப்போதுதான் இயல்புநிலை திரும்பும்?

featured image

பிரியங்கா காந்தி கேள்வி…

புதுடில்லி, ஜன.3- மணிப்பூர் மாநிலத்தில் எப்போதுதான் இயல்பு நிலை திரும்பும் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் வன்முறை தொடங்கியது. தொடர்ந்து பல மாதங்களாக அங்கு அசாதாரண நிலை நீடித்து வருகிறது.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “மணிப்பூர் மாநிலத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மணிப்பூர் மக்கள் கடந்த எட்டு மாதங்களாக வன்முறை, கொலை மற்றும் அழிவை பார்த்து வருகின்றனர்.
எப்போதுதான் இந்த வன்முறை ஓயும்? மணிப்பூரில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் டில்லிக்கு வந்து பிரதமரை சந்தித்துப் பேசுவதற்கு நேரம் கோரினர். ஆனால், இன்று வரையிலும் பிரதமர் அவர்களை சந்திப்பதற்கு முன்வரவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லவும் இல்லை, மணிப்பூரைப் பற்றி பேசவும் இல்லை, இந்த விவகாரம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படிப்பட்ட தலைமையா மணிப்பூருக்கு தேவை?
அரசு இனியும் தாமதிக்காமல் இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுத்து வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் அங்குள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு நம்பிக்கையளித்து அமைதியைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment