சென்னை, ஜன.18 ராமர் கோயில் குட முழுக்கு தேர்தல் ஆதாயங் களுக்கான அரசியல் பிரச்சாரமாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிதரூர் குற்றம்சாட்டியுள்ளார்.
‘துக்ளக்’ ஆண்டு விழாவில்அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற் குழு உறுப்பினர் சசிதரூர் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண் டார். அவர் பேசியதாவது:
பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் கூட்டாட் சித் தத்துவம் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை குறிவைக்க அம லாக்கத் துறையை ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது. இது கூட் டாட்சியை சிதைக்கும் செயல். மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டப்படுகிறது. 16-ஆவது நிதி ஆணையம் செயல் பாட்டுக்கு வந்தால், மாநிலங்களுக் கான நிதி பகிர்வில் இன்னும் மோச மான நிலை உருவாகும். ஒன்றிய பாஜக அரசின் ஹிந்தி, இந்து, இந்துஸ்தான் அரசியல் கவலை அளிக்கிறது. இந்த ஆதிக்க கலாச் சாரம் ஏற்கெனவே பல தென்னிந்திய அரசியல்வாதிகள் இடையே பிரச்சினையை எழுப்பியுள்ளது. இந்துத்வா என்ற பெயரில் பாஜக அரசு பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது. இவற்றின் விளைவுகள் நாட்டின் ஒற்றுமையை அச்சுறுத் துவதால், இது மிகவும் தீவிரமான பிரச்சினை ஆகும்.
ராமன் கோயில் விழாவை தேர்தல் ஆதாயங்களுக்கான அர சியல் பிரச்சாரமாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது. ராமன் கோயில் 22ஆ-ம் தேதி திறப்பதற்கு ஒரே காரணம் அரசியல் மட்டுமே. நான் ராமன் கோயிலுக்கு செல்வேன். ஆனால், 22ஆ-ம் தேதி செல்ல மாட் டேன். இவ்வாறு சசிதரூர் கூறினார்.
No comments:
Post a Comment