டில்லி கோயில் நிகழ்ச்சியில் மேடை சரிந்து பெண் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 29, 2024

டில்லி கோயில் நிகழ்ச்சியில் மேடை சரிந்து பெண் பலி

புதுடில்லி, ஜன. 29- டில்லியில் கோயில் நிகழ்ச்சியில் மேடை சரிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தார். 17 பேர் படுகாயமடைந்தனர். டில்லி, கல்காஜி கோயிலில் நேற்று முன்தினம் (27.1.2024) இரவு ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றும் விஅய்பிக்கள் அமர்வதற்கு பெரிய மேடை அமைக்கப்பட்டு இருந்தது.
நள்ளிரவு 12.30 மணியளவில் பஜனை நடந்து கொண்டி ருந்த போது மேடை திடீரென சரிந்தது. மேடைக்காக அமைக்கப்பட்டு இருந்த பலகைகள் கீழே அமர்ந்திருந்த வர்களின் மீது விழுந்தது. மேடையில் இருந்தவர்களும் அவர்கள் மீது விழுந்தனர். இதனால் அங்கு கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இந்த நிகழ்வில் ஒரு பெண் பலியானார். 17 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு
சில கட்சிகளுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை
மல்லிகார்ஜுன கார்கே தகவல்

பெங்களூரு, ஜன.29 கர்நாடக மாநிலம் கலபுர்கியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், மக்களவை தேர்தலுக்கு ஏற்கெனவே தயாராக தொடங்கி விட்டோம். எங்கள் கட்சி சார்பில் ராகுல் காந்தி ’இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம்’ மேற்கொண்டு வருகிறார். நானும் தெலங்கானாவிற்கு சென்றேன். எனது சுற்றுப் பயணத்துக்கான தேதிகள் விரைவில் முடிவு செய்யப்படும். ராகுல் காந்தியும் என்னுடன் சில இடங்களுக்கு வருவார்.
மக்களவை தேர்தலுக்கான வேலைகளை நாங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டோம். தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்ய, முகுல் வாஸ்னிக் தலைமையில் 6 பேர் அடங்கிய கமிட்டியை அமைத்திருக்கிறேன். அந்த கமிட்டி கூட்டணி கட்சிகளு டன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. சில கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்த உடன்பாடு எட்டப்பட்டுவிட்டது. சில கட்சிகளுடனான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது என்றார்.

No comments:

Post a Comment