சென்னை, ஜன.20- தமிழ்நாட்டில் நடைபெறும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி ஆங்கிலத்தில் பேசுவதுதான் வழக்கம். அவ்வாறு மோடி ஆங் கிலத்தில் பேசும்போது, மொழி பெயர்ப்பாளர் மூலம் தமிழில் மொழி பெயர்க்கப்படும். ‘கேலோ இந்தியா’ தொடக்க விழாவில் கலந்து கொண்ட மோடி, ஹிந்தி யில் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் வடமாநிலங் களைச் சேர்ந்த பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற தால் மோடி ஹிந்தியில் பேச முடிவு செய்யப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும் மோடியின் பேச்சை தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், பாஷினி (செயற்கை நுண்ணறிவு அடிப் படையிலான மொழி பெயர்ப்பு ஆன்லைன் செயலி) என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் தமிழில் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
இதற்கான கியூ ஆர் கோடு பத்திரிகையாளர்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த பாஷினி தொழில்நுட்பம் மூலம் மோடி யின் ஹிந்தி பேச்சை தமிழில் அறிந்து கொள்ள பத்திரிகை யாளர்கள் ஆர்வமாக இருந்தனர்.
ஆனால், பாஷினி தொழில் நுட்பம் மூலம் மோடியின் பேச்சு மொழி பெயர்க்கப்பட்டது தெளி வாக இல்லை. அதாவது, அவரது பேச்சு சீராக, அதேவேளையில் புரிந்து கொள்ளும் வகையில் அந்த மொழிபெயர்ப்பு இல்லை.
முன்னுக்கு பின் முரணாக இருந்தது. இதனால் மோடி ஹிந்தியில் பேசியதை உடனடி யாக மொழி பெயர்க்க முடியாமல் பத்திரிகையாளர்கள் திணறினர்.
Saturday, January 20, 2024
சென்னையில் பிரதமரின் ஹிந்தி உரை மொழிபெயர்ப்பில் குழப்பமோ குழப்பம்!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment