‘தி(இ)னமலர்' பதில் கூறுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 21, 2024

‘தி(இ)னமலர்' பதில் கூறுமா?

கருஞ்சட்டை

கேள்வி: நான் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று எண்ணுகிறேன். என்ன செய்தால், உயர்நிலையை அடைய முடியும்?
பதில்: உங்களிடம் அகங்காரமும், சுயநலமும் இருக்கிறதா… அவற்றை முதலில் ஒழித்துக் கட்டுங்கள். ஒழுக் கத்தையும், அடக்கத்தையும் வளர்த் துக் கொள்ளுங்கள். உயர்ந்த நிலைக்கு வந்துவிடலாம்.

‘தினமலர்’ அந்துமணி பதில்கள்,
(14.1.2024, பக்கம் 4)

நமது பதிலடி:

அப்படியா சேதி?

‘சண்டே மெயில்’ ஏட்டில் (5.11.1993) வி.என்.நாயர் என்பவர் எழுதிய கட்டுரை யில் சங்கர மட நாயகர்களின் ஒழுக்கம், சிரிப்பாய்ச் சிரித்ததே! எம்.டி.வியில் ஆபாச காட்சிகளைப் பார்ப்பதிலிருந்து சின்னவர் கிரிக்கெட் விளையாடுவது வரை விஸ்தார மாக தெரிவிக்கப்பட்டு இருந்ததே! முற்றும் துறந்தவர்கள், ஆணவத்தை அறுத்தவர்கள், ஆசையைத் துறந்தவர்கள் என்றெல்லாம் ஒப்புக்குச் சொல்லலாம், ஜெயேந்திரரைத் தெரிந்தவர்கள் இதனை ஏற்றுக் கொள் வார்களா?
‘‘நூறு விவேகானந்தர்களுக்கு மேலே நான் போய்விட்டேன்” என்று சொன்ன ஜெயேந்திர சரஸ்வதியின் வார்த்தைகளில் அடக்கம் தொனிக்கிறதா? ஆணவம் தெறிக் கிறதா?

♦♦♦

14.2.2001 அன்று இராமேசுவரரம் இராமநாதபுரம் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி இளைய சங்க ராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதியாரும் கலந்து கொண்டனர். விழாக் குழுவினர் இந்தச் சங்கராச்சாரியார்களுக்கு சிறப்பு செய்யும்பொழுது, யாருக்கு முதல் மரியாதை என்பதில் மோதல் ஏற்படவில்லையா? மதுரை ஆதீனகர்த்தர் தலையிட்டு, அன்று இரவு விடிய விடிய கட்டப் பஞ்சாயத்து நடத்தி, இரண்டு மடாதிபதிகளுக்கும் சமரசம் செய்து வைத்தாரே (‘தினபூமி’, 15.2.2001) ‘தினமலர்’ அந்துமணியாரே உங்கள் பதில்படி இவர்கள் உயர்ந்த நிலைக் குச் செல்லத் தகுதி படைத்தவர்கள்தானா?

♦♦♦

3.11.2000 திருப்பதியில் தோமாலை சேவையின்போது குலசேகரன்படியில் அமர்ந்து அங்கு அர்ச்சகர்கள் ஆட்சேபித் தும், ஒரு முகூர்த்த காலம் (ஒன்றரை மணி) காஞ்சி ஜெயேந்திரர் அர்ச்சனை செய்தார். இதற்கு எதிர்ப்புக் கிளம்பிடவில்லையா?
பிராமணர்களிலும், ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் அர்சசனை செய்யவேண்டும் என்று ஆகமம் கூறுவதாக உச்சநீதிமன்றம் வரை சென்று ஆதாரங்களை அள்ளி விட்டார்களே – அது காஞ்சி சங்கராச்சாரி யாருக்குப் பொருந்தாதா?

9.10.2002 அன்று சென்னை நாரதகான சபாவில் தாம்ப்ராஸ் எனப்படும் பார்ப்பன சங்கத்தின் ஏற்பாட்டில் ‘‘அருந்தொண்டாற் றிய தமிழக அந்தணர்கள்” நூல் வெளியீட்டு விழாவில், ‘‘ஆண்டவனுக்குமேல் அந்தண ரான பிராமணர்கள்” என்று பேசினாரே – ‘தினமலர்’ அந்துமணி கூறும் அடக்கம், ஒழுக்கம், அகங்காரம் நுரைத் தள்ளிப் பொங்கி வழிகிறதா?
காலம் மாறிவிட்டது காகப்பட்டர்களே துள்ளாதீர்!

No comments:

Post a Comment