– கருஞ்சட்டை –
விருதுநகரில் நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
அப்போது செய்தியாளர்கள் ஜாதிப் பெயருடன் சேலம் ஆத்தூர் விவசாயிகளுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ள விவகாரத்தில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலகவேண்டும் என வணிகவரித் துறை துணை ஆணையர் பால முருகன் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதி யிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஆளுநர் இல.கணேசன், ‘‘தமிழ்நாட்டில் மட்டும்தான் குடும்பப் பெயரையோ, ஜாதிப் பெய ரையோ சேர்த்துக் கூறுவது, எழுதுவது புழக்கத்தில் இல்லை. நிறுத்திவிட்டனர். ஆனால், வடமாநிலங்களில் ஜாதிப் பெயர் மற்றும் குடும்பப் பெயரை போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அங்கு எதிர்க் கட்சியோ, ஆளுங்கட்சியோ அவர்கள் பின்னால் இப்பெயர்கள் இயல்பாக வரும். நீங்கள் கூறும் அதிகாரி குறித்து எனக்குத் தெரியவில்லை. அவரே ஜாதிப் பெயரை சேர்த்திருக்கிறாரா? சேர்த்திருந்தாலும் தவ றில்லை. இதுபற்றி எனக்குத் தெரியவில்லை” என்றார்.
ஓர் ஆளுநராக இருக்கக் கூடியவர் இப்படி பொறுப்பற்ற முறையில் கருத்துக் கூறுகிறார் என்றால், இதன் பொருள் என்ன?
தமிழ்நாட்டில் மட்டும் ஜாதிப் பெயர் ஒட்டு இல் லாமல் போனதற்குக் காரணத்தையும் ஆளுநர் இல.கணேசனார் சொல்லியிருக்கலாமே!
தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும்தானே இதற்குக் காரணம்! இதில் இன்னொன்றையும் கவனிக் கத் தவறக்கூடாது.
அமலாக்கத் துறை சார்பில் ராமநாயக்கன் பாளை யத்தைச் சேர்ந்த கண்ணையன், கிருஷ்ணன் ஆகி யோருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் முகவரியில், இரு வரின் பெயர்களையும் எழுதியதோடு, HINDU PALLAN என்று குறிப்பிட்டதுதான்.
இதை நியாயப்படுத்துகிறாரா நாகலாந்து ஆளுநர் திரு.இல.கணேசன்?
பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். சார்ந்தவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே! அதுவும் ஆளுநராகப் பதவி வகிக்கும் நிலையிலும் ஜாதி உணர்வு இருப்பது கெட்ட வாய்ப்பே!
No comments:
Post a Comment