கோவை மருத்துவக்கல்லூரிக்கு பெரியார் பெருந்தொண்டர் இ.கண்ணன் உடற்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 7, 2024

கோவை மருத்துவக்கல்லூரிக்கு பெரியார் பெருந்தொண்டர் இ.கண்ணன் உடற்கொடை

கோவை, ஜன. 7- கோவையில் பெரியார் பெருந்தொண்டர் இ.கண்ணன் (வயது 84) கடந்த 3.1.2024 அன்று மறைவுற்றார். அவரது உடல் காந்தி பார்க் அருகில் உள்ள அவருடைய இல்லத்தில் இறுதி மரியாதை செலுத்தப்படுவதற்காக வைக் கப்பட்டது

கண்ணன் அவர்களின் துணைவியார், மகன், மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் எந்த வித நிகழ்வு களும் செய்வதில்லை என்று அறிவித்தனர். அவரின் விருப் பப்படி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கொடை வழங்க ஏற்பாடுகளை செய்ய மாவட்ட தலைவரிடம் கேட்டுக்கொண்டனர்.

கோவை மாவட்ட கழக தலைவர் ம.சந்திரசேகர் தலை மையில் பெரியார் பெருந் தொண்டர் மறைந்த இ.கண் ணன் அவர்கள் உடலுக்கு மாவட்ட செயலாளர் க.வீரமணி, மாநகர தலைவர் திக செந்தில்நாதன், தெற்கு பகுதி செயலாளர் தெ.குமரேசன், தோழர் தமிழ்முரசு, நா.குரு, ஆட்டே சக்தி, மற்றும் ஜீடி நாயுடு நினைவு பெரியார் படிப் பக காப்பாளர் அ.மு.ராஜா உள்ளிட்டோர் கழக கொடியை மறைந்த கண்ணன் உடலுக்கு போர்த்தி மாலை அணிவித்து வீரவணக்க மரி யாதை செலுத்தினர்.

4.1.2024 அன்று காலை 10 மணி அளவில் அவருடைய இல்லத்தில் இருந்து உணர்ச்சி மிக்க பெரியார் தொண்டருக்கு வீரவணக்கம், ஜாதி ஒழிப்புக் போராளிக்கு வீரவணக்கம், சமூக நீதி போராளிக்கு வீர வணக்கம் என்ற திராவிடர் கழகத் தோழர்கள் வீரவணக்க முழக்கத்துடன் அவரது உடலை சுமந்து கொண்டு இறுதி ஊர்வலம் செல்லும் வாகனம் வரை வந்தனர்
திராவிடர் கழக தோழர்கள் இருசக்கர வாகனத்தில் அணி வகுத்து வாகனத்தில் உறவினர் கள் வர அவரது உடலை சுமந்துகொண்டு இறதி ஊர்வலம் புறப்பட்டு கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

2015ஆம் ஆண்டு கோவை செல்வபுரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக வட்டார மாநாட்டு மேடையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களி டம் தமது மறைவுக்கு பிறகு தமது உடலை மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சிக்கு வழங்க விண் ணப்பம் அளித்தார். அவரின் விருப்பப்படியே அவரின் குடும் பத்தினர் கோவை அரசு மருத் துவக் கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டுக்காக அவரது உடலை உதவி இருப்பிட மருத் துவ அதிகாரி செ.குணசேகரன் அவர்களிடம் குடும்ப உறுப் பினர்கள் முன்னிலையில் கழக தோழர்கள், தலைமையில் உடல் கொடையாக வழங்கப் பட்டது. உடலைப் பெற்றுக் கொண்டு மருத்துவ அதிகாரி கள் அதற்கு உரிய சான்றிதழை வழங்கினர்.

மறைந்த கண்ணன் அவர் களின் வாழ்விணையர் விஜயா, மூத்தமகன் க.செந்தில்குமார், மருமகள் வசுந்தராதேவி, பேரன்கள் செ.திலிபன், செ.அகிலன் மற்றும் இளையமகன் க.மகாலிங்கம் , மருமகள் வித்தியா, பேரன் மித்ரன், மகள் சண்முகபிரியா, மருமகன் சிவ ராம், பேத்தி சஷ்வினா, நித்யா, ஜெயக்குமார் ஜனனி புவிதா, மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி, பொதுக் குழு உறுப்பினர் பழ.அன்பரசு, மாநில இளைஞரணி அமைப் பாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன், கோவை மாநகர செயலாளர் ச.திராவிடமணி, மாவட்ட துணை தலைவர் மு.தமிழ்செல்வம், மாவட்ட துணை செயலாளர் திக காளிமுத்து, வடக்கு பகுதி செயலாளர் கவி கிருஷ்ணன், கிழக்கு பகுதி செயலாளர் இல.கிருட்டினமூர்த்தி மற்றும் ஆட்டோ சக்தி, ச.செல்வ குமார், சா.ராசா, ந.குரு, மாநகர அமைப்பாளர் வெங்கடேஷ், கு.வெ.கி செந்தில், பக மாவட்ட செயலாளர் அக்ரிநாகராஜ், வெற்றி செல்வன், மே.ப.ரங்க சாமி, பொதுக்குழு உறுப்பினர் திலகவதி, மகளிரணி கலைச் செல்வி முத்துமணி, கவிதா, பொள்ளாச்சி நாகராஜ், சிவராஜ், திருப்பூர் மாவட்ட கழக தலைவர் யாழ் ஆறுச்சாமி, செயலாளர் குமரவேல், தொழிலாளர் அணி தலைவர் வெங்கடாசலம், தெற்கு பகுதி செயலாளர் தெ.குமரேசன். கிழக்கு பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தோழர் தமிழ்முரசு, பெயிண்டர் குமார், பெரியார் புத்தக நிலை யம் – ஜீடி நாயுடு நினைவு பெரியார் படிப்பகம் காப்பா ளர் அ.மு.ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment