மும்பை,ஜன.11- இந்திய விண் வெளி ஆராய்ச்சிக்கழகத்தில் (இஸ்ரோ) அய்அய்டி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இணைய வேண்டும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தி யுத்தியுள்ளார்.
சமீபத்தில், பாம்பே அய்அய்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோம்நாத் கலந்துகொண்டு பேசினார். அப் போது அவர், விண்வெளித் துறை யின் போக்கு குறித்தும், இஸ்ரோ முன்னெடுத்து வரும் புதிய ஆராய்ச்சி திட்டங்கள் குறித்தும் பேசினார்.
அய்அய்டி மாணவர்கள் இஸ் ரோவில் இணைய வேண்டியதன் அவசியத்தையும் அவர் முன்வைத் தார்.
“நிலவில் சந்திரயான் தரையிறங்கிய பிறகு, மக்களிடையே விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆர் வம் அதிகரித்து இருக்கிறது.
விண்வெளி ஆராய்ச்சியில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தும் திட் டங்களை இஸ்ரோ முன்னெடுத் துள்ளது. இளைய தலைமுறையினரே புதிய ஆராய்ச்சிகளை முன்னெடுத்து செல்ல உள்ளனர்.
நம் நாட்டில் திறன்மிக்க பொறி யாளர்கள் பெரும்பான்மை யாக அய்அய்டி-களிலிருந்து உருவாகி வருகின்றனர். எனவே, அய்அய்டி மாணவர்கள் இஸ்ரோவில் இணைந்து நாட்டுக்காக பணியாற்ற முன்வர வேண்டும்” என்று தெரிவித்தார்.
ஊதிய அளவு காரணமாக அய்அய்டி மாணவர்கள் இஸ்ரோ வில் சேர ஆர்வம் காட்டுவதில்லை என்று கடந்த ஆண்டு ஒரு பேட்டி யில் சோம்நாத் தெரிவித்திருந்தார்.
‘‘சிலர் மட்டுமே இஸ்ரோவில் இணைய ஆர்வம் காட்டுகின்றனர். பெருவாரியானவர்கள், ஊதியத் தைப் பார்த்துவிட்டு இஸ்ரோவில் இணையும் எண்ணத்தை விட்டு விடுகின்றனர்” என்று அவர் குறிப் பிட்டார்.
இந்நிலையில், அதிக எண்ணிக் கையில் அய்அய்டி மாணவர்கள் இஸ் ரோவில் இணைய வேண்டும் என்று அவர் தற்போது வலியுறுத்தி யுள்ளார்.
No comments:
Post a Comment