ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் மறைவு பொருளாளர் வீ.குமரேசன் தலைமையில் கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 20, 2024

ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் மறைவு பொருளாளர் வீ.குமரேசன் தலைமையில் கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

featured image

சென்னை, ஜன. 20- சுயமரியாதைச் சுடரொளி மாயவரம் சி.நட ராசன் அவர்களின் மகனும் பிரபல ஆடிட்டருமான சி.என்.ஜெயச்சந்திரன் அவர்கள் மறை வுற்றார். அம்பத்தூரில் வைக்கப் பட்டிருந்த அவரது உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் வீ.குமரே சன் தலைமையில் இறுதி மரி யாதை செலுத்தப்பட்டது.
பின்னர் அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பொருளா ளர் வீ.குமரேசன் தமிழர் தலை வர் ஆசிரியரின் இரங்கல் அறிக் கையைப் படித்து இரங்கல் உரையாற்றினார்.

கூட்டத்தில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், மாநில துணைச் செயலாளர் என்.பெரியசாமி, நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மேலாண் இயக் குநர் க.சந்தானம் ஆடிட்டர்கள் ஜான்மோசஸ், மகேஷ்வரி உள்ளிட்டேர் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் விடுதலை அச்ச கப் பிரிவு மேலாளர் க.சரவணன் ஆவடி மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன், மாவட்டச் செயலாளர் க.இளவரசன், மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் சோ.சுரேஷ், மாவட்டத் துணைத் தலைவர் வை.கலையரசன், ஆவடி மாவட் டத் துணைச்செயலாளர் உடு மலை வடிவேல், ஆவடி மாவட்ட இளைஞரணி செயலாளர் எ.கண்ணன், தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் மாணிக்கம், அம் பத்தூர் நகரத் தலைவர் பூ.இராமலிங்கம், நகரச் செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மறைந்த சி.என்.ஜெயச்சந் திரன் குடும்பத்தினர்களான சுரியா காரல் மார்க்ஸ், பரத் கண்ணியப்பன், சுவாதி பரத், ப.கு.ராஜன், சாதுக்குமார் உள்ளிட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் தொலைபேசியில் அவர்க ளிடம் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment