உருமாறிய கரோனா வைரஸ் பரவல் - குழந்தைகள், முதியோர் முகக் கவசம் அணிய வேண்டும் : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 4, 2024

உருமாறிய கரோனா வைரஸ் பரவல் - குழந்தைகள், முதியோர் முகக் கவசம் அணிய வேண்டும் : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

featured image

சென்னை, ஜன.4- உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, வயதானோர், குழந்தைகள், இணை நோயுள்ளோர், கர்ப்பிணிகள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக் கவசம் அணிய வேண்டும் என்று அமைச் சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

காசநோய் இல்லா தமிழ்நாடு
சென்னை தலைமைச்செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று (3.1.2024) ரூ.27.96 கோடி மதிப்பீட்டில் காசநோயைக் கண்டறிய அதி நவீன விரைவு மூலக்கூறு கண்டறியும் கருவிகள், இந்தியன் ஆயில் கார்பரேஷன் (அய்.ஓ.சி.எல்.) நிறுவனத் தின் பெருநிறுவன கூட்டு சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து (சி.எஸ்.ஆர்.) வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந் தம் கையெழுத்தானது.
பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி வருமாறு:-
2025ஆம் ஆண்டிற்குள் காச நோய் இல்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடையும் நோக்கில் பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டு முழுவதும் சளி பரிசோ தனைகள் 20 லட்சம் எண்ணிக்கையில் செய்யப்பட்டு இதுவரை தமிழ்நாட்டில் காசநோயாளிகள் 97ஆயிரம் பேர் கண்ட றியப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு,
100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உதவியுடன் ஊட்டச்சத்து மருந்துகள் தரப்படுகிறது.

ஜே.என்.1. கரோனா
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு 20 என்ற எண்ணிக்கையில் மட்டும்தான் இருக்கிறது. நேற்று (3.1.2023) 25 என்றள வில் இருந்தது. அதில் சென்னையில் 15 பாதிப்பு காணப்பட்டது. உருமாறிய ஜே.என். கரோனா வைரசஸ் உலகளவில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் ஆயிரம் என்றளவில் கரோனா பரவியிருந்தது. 5ஆவது டோஸ் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று அறி வுறுத்தப்பட்டு இருக்கிறது. இதுபற்றி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்து வர்களுடன் தொடர்ந்து பேசுகிறோம். இந்தியாவில் அதற்கான அவசியம் தற்போது எழவில்லை என்று ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை கூறியுள்ளது.

முகக் கவசம்
வயது முதிர்ந்தவர்கள்,கர்ப்பிணிகள், சிறு குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பொதுவான இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, சமூக இடைவெளி கடைப் பிடிப்பது போன்ற வழிகாட்டுநெறி முறைகள் பின்பற்றவேண்டும் என்று ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத்துறையும், உலக சுகாதார நிறுவனமும் அறிவுறுத்தி யுள்ளன. இதுவரை 26 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு 23 ஜே.என்.1 வகை கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குழு பாதிப்பு எங்கும் ஏற்படவில்லை.

மழைக்கால மருத்துவ முகாம்கள்
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழையினால் 7,892 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 48 ஆயிரத்து 604 பேர் பயனடைந்துள்ளனர். ஆக மொத்தம் கடந்த 2 மாதங்களாக 24.13 லட்சம் பேர் மருத்துவ முகாம்களின் மூலம் பயனடைந்துள்ளனர். இதன்மூலம் மழைக்கால நோய்களின் தாக்கம் குறைக் கப்பட்டுள்ளது. 40 லட்சம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. ‘மிக்ஜம்’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக் கும். மருத்துவ கட்டமைப்புகளை சரி செய்வதற்கும் ரூ.49 கோடி தொகை ஒன்றிய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.
-இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment