சபரிமலை கோவிலில் பெண்கள் நிற்பதைப் போன்ற காட்சிப் பதிவு போலியானது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 22, 2024

சபரிமலை கோவிலில் பெண்கள் நிற்பதைப் போன்ற காட்சிப் பதிவு போலியானது

featured image

பத்தினம்திட்டா, ஜன. 22- சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தின் 18 படிகள் அருகே இரண்டு இளம் பெண்கள் இருமுடி கட்டியது போன்ற காட்சிப்பதிவு (வீடியோ) ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதுதொடர்பாக பத்தனம்திட்டா மாவட்ட சைபர் பிரிவு காவல்துறையினர் தானாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து மேற் கொண்ட விசாரணையில், ராஜேஷ் என்ற இளைஞரின் இன்ஸ் டாகிராம் பக்கத்தில் 18.1.2024 அன்று மாலை 5 மணிக்கு போலி யாக சித்தரிக்கப்பட்ட காட்சிப் பதிவு முதன்முதலில் பகிரப்பட்டிருப்பது கண்டறியப் பட்டது.
மேலும் இரண்டு இளம் பெண்கள் இருமுடிகட்டியது போன்ற படங்களை சபரிமலை அய்யப்பன் கோவிலின் படிகளுக்கு அருகில் நிற்பது போன்று எடிட் செய்து சமூகவலைதளங்களில் அவர் பரப்பியது தெரிய வந்தது. இதை யடுத்து, மத உணர்வுகளை புண்படுத்துதல், வேண்டு மென்றே கலவரத்தை உருவாக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள தாக பத்தனம்திட்டா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
பா.ஜ.க. மூத்த தலைவர் சு.சாமி குட்டு
புதுடில்லி, ஜன. 22- அயோத்தியில் உள்ள ராமன் கோவிலை தான் கட்டியதாக பிரதமர் கூறிக்கொள்கிறார். அயோத்தி ராமன் கோவிலில் அவரது பங்களிப்பு பூஜ் ஜியம் தான். அதற்கு பதிலாக மோடி தனது வாரணாசி தொகுதியில் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் மின்வாரியத்தில்
500 பேருக்கு தொழில் பழகுநர் பயிற்சி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது
சென்னை, ஜன. 22- தமிழ்நாடு மின்வாரியத்தில் 500 டிப்ளமோ பொறியாளர்களுக்கு உதவித் தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி வழங்க மின்வாரியம் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக மின்வாரிய தொழில்நுட்ப பிரிவு பிறப்பித்த உத்தரவு:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றில் 500 டிப்ளமோ பொறியாளர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி வழங்கப்படவுள்ளது. தேர்ந்தெடுத்து பயிற்சி வழங்கப் படும் 500 பேருக்கு உதவித்தொகை உள்ளிட்ட வகை யில் மாதம் ரூ.8 ஆயிரம் என மொத்தம் ரூ.4.80 கோடி செலவு செய்யவும் கணக்கிடப்பட்டுள்ளது. இத்திட்டத் துக்கு மின்வாரியத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, சென்னை, தரமணியிலுள்ள தொழில் பழகுநர் பயிற்சி வாரிய இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். தொடர்ந்து மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு 15 நாள்கள் அவகாச மும் வழங்கப் படும். அதன் பின்னர், இடஒதுக்கீடு உள் ளிட்ட அடிப்படை யில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப் பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற பணிகளுக்குப் பிறகு இறுதிப் பட்டிய லின்படி வாரிய அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment