தமிழ்நாட்டின் மழை வெள்ள பாதிப்பை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும்! பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 3, 2024

தமிழ்நாட்டின் மழை வெள்ள பாதிப்பை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும்! பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

featured image

திருச்சி, ஜன. 3- “கடந்த மாதம் சென்னை மற்றும் தென் மாவட் டங்களில் கடுமையான மழைப் பொழிவைத் தொடர்ந்து ஏற் பட்ட வெள்ளம் காரணமாக அந்த மாவட்டங்களின் பொது உட்கட்டமைப்புகள் பெருத்த சேதம் அடைந்திருக்கின்றன. மக்க ளின் வாழ்வாதாரமும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, அவற்றை கடுமையான இயற்கை பேரிடர் என்று அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரண நிதியை வழங்க, தமிழ் நாட்டு மக்கள் சார்பாக நான் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்” என்று திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் நடைபெற்ற புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டட திறப்பு விழாவில் பேசிய முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத் துள்ளார்.

திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங் களின் தொடக்க விழா, பாரதி தாசன் பல்கலைக்கழக பட்ட மளிப்பு விழா ஆகியவற்றில் பங் கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருச்சி வந்தடைந் தார்.

விமான நிலையத்தில் அவரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ஆகியோர் வரவேற்றனர். திருச்சி பன்னாட்டு விமான நிலை யத்தில் நடைபெற்ற புதிய ஒருங்கி ணைந்த முனைய கட்டட திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு முடி வுற்ற திட்டப் பணிகள் திறப்பு விழா மற்றும் புதிய திட்டங்களுக் கான அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது:

“தொட்ட துறை அனைத்திலும் சிகரத்தைத் தொட்ட மாநிலமான தமிழ்நாடு இந்தியாவின் பொருளா தார வளர்ச்சியிலும் முக்கிய பங் காற்றி வருகிறது. அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் இதயப்பகுதியாக இருக்கிற திருச்சிராப்பள்ளி பன் னாட்டு விமான நிலையத்தில் 1,112 கோடி ரூபாய் செலவில் அமைக்கப் பட்டுள்ள புதிய முனையத்தை பிர தமர் திறந்து வைத்து சிறப்பித் திருக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் என்ற வகையில், தமிழ்நாட்டு மக்கள் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல், இந்த துறையின் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருச்சி பன்னாட்டு விமான நிலையம், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய பன்னாட்டு விமான நிலை யம்.
இதை மேலும் தமிழ்நாடு அரசு ரூ.318 கோடியே 85 லட்சம் செல வில், 294.57 ஏக்கர் நில எடுப்பு செய்து இந்திய விமான ஆணையத் துக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் திருச்சி உட்பட சென்னை, கோவை, மதுரை, வேலூர், தூத்துக்குடி விமான நிலையங்களை, விரிவாக்கம் மற் றும் நவீன மயமாக்க ரூ.3,118 கோடி செலவில், 2,302.44 ஏக்கர் அரசு மற்றும் பட்டா நிலங்களை இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விரிவாக்கப் பணி களை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

தென் தமிழ்நாட்டில் ராமேசு வரம், கன்னியாகுமரி ஆகிய இடங் களுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் மக்கள் ஆன்மிக பயணமாக வருகின்றனர். பல நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.

அவர்கள் எளிதாக வந்து செல்ல ஏதுவாக, மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என நாங்கள் ஏற்கெனவே வைத்த கோரிக்கையை பிரதமர் கனிவோடு பரிசீலிக்க வேண்டுகிறேன்.
மலேசியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாடு பண் பாட்டு மற்றும் வர்த்தக தொடர் புகள் கொண்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு சென்னை _ -பிணாங்கு மற்றும் சென்னை _ -டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை முன்னுரிமை அடிப்படையில் தொடங்க வேண் டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மெட்ரோ ரயில்

அத்துடன் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகளுக்கு பங்கு பகிர்வு மாதிரி அடிப்படையில் ஒன்றிய அரசினு டைய பங்கை விரைந்து வழங்க பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.

நெடுஞ்சாலைத் துறையைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
சமீபகாலமாக இருவழிச் சாலை யாக மேம்படுத்துகிற நெடுஞ்சாலை களுக்கும் சுங்கக் கட்டணம் வசூ லிக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

திருச்சி மாவட்டத்தின் MSME நிறுவனங்கள்தான் (NHAI) பொதுத் துறை நிறுவங்களுக்குத் தேவை யான உதிரி பாகங்களை வழங்கி வந்தனர். தற்போது BHEL நிறுவனத்திடமிருந்து BHEL நிறுவனங் களுக்கு வரும் கேட்பாணை மிகவும் குறைந்துவிட்டது.

இதனால், இந்தப் பகுதியில் செயல்பட்டு வருகின்ற விஷிவிணி நிறு வனங்கள் மிகவும் பாதிக்கப்பட் டுள்ளன. எனவே, ஙிபிணிலி நிறுவனம் அதிகப்படியான கேட்பாணை களை விஷிவிணி நிறுவனங்களுக்கு வழங்க ஆவன செய்ய வேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.
பிரதமர் அறிந்த ஒன்றுதான், கடந்த மாதம் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடுமை யான மழைப்பொழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அந்த மாவட்டங்களின் பொது உட் கட்டமைப்புகள் பெருத்த சேதம் அடைந்திருக்கின்றன.

மக்களின் வாழ்வாதாரமும் மோசமாக பாதிக்கப்பட்டிருக் கிறது. எனவே, அவற்றை கடுமை யான இயற்கை பேரிடர் என்று அறிவித்து, தேசிய பேரிடர் நிவா ரண நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரண நிதியை வழங்க, தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நான் மீண்டும் கேட்டுக் கொள் கிறேன்.

தொடர்ந்து கோரிக்கையாக வைக்கிறோமே என்று எண்ண வேண்டாம். பரந்து விரிந்த இந்திய பெரு நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு நெருக்கமாக இருந்து கல்வி, மருத்துவம், அவசிய தேவை கள் மற்றும் உதவிகளை செய்துதர வேண்டிய முக்கிய கடமை மாநில அரசுகளுக்குத்தான் இருக்கிறது. மாநிலத்துக்காக கோரிக்கை வைப் பதும், மாநில உரிமைகளை நிலை நாட்டுவதும், அங்கு வாழும் மக்களின் கோரிக்கைகள்தானே தவிர, அவை, ‘அரசியல் முழக் கங்கள்‘ அல்ல. அந்த வகையில், தமிழ்நாடு அரசின் கோரிக் கைகளை பிரதமர் நிச்சயமாக நிறை வேற்றி தருவார் என நான் நம்புகிறேன்” என்று முதல்வர் பேசினார்.

No comments:

Post a Comment