ராமநவமி - சிவராத்திரிக்கு பொது விடுமுறைக்கு உத்தரவிட முடியாது சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 21, 2024

ராமநவமி - சிவராத்திரிக்கு பொது விடுமுறைக்கு உத்தரவிட முடியாது சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை, ஜன.21 ராம நவமி, சிவராத்திரி விழாக்களுக்கு பொது விடுமுறை அளிக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கடலூரை சேர்ந்த அர்ஜூனன் இளையராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ராம நவமிமற்றும் சிவராத்திரி போன்ற முக்கியமான இந்து விழாக்களுக்கும்பொது விடுமுறை அளிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

ஏனெனில் இந்த விழாக்களை இந்தியாவில் உள்ள பெரும்பாலான இந்துக்கள் கொண்டாடுகின்றனர். எனவே இந்துக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த விழாக்களுக்கு பொது விடுமுறை அளிக்க ஒன்றிய அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, ராம நவமி, சிவராத்திரி போன்ற விழாக்களுக்கு பொதுவிடுமுறை அளிக்க வேண்டுமென ஒன்றிய அரசுக்கு உத்தரவிட முடியாது என மறுப்பு தெரிவித்தனர். மேலும், மனுதாரர் தனது கோரிக்கை குறித்து ஒன்றிய அரசை மீண்டும் அணுகலாம், எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment