தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநாட்டில் 'கல்வியில் கலைஞர்' கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 30, 2024

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநாட்டில் 'கல்வியில் கலைஞர்' கருத்தரங்கம்

featured image

புதுக்கோட்டை, ஜன. 30- புதுக் கோட்டை மாவட்டம் சந்தைப் பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி யில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சென்னை யில் நடைபெறக்கூடிய நன்றி அறிவிப்பு மாநாட்டிற்கு ஆயத்தப்படுத்தும் வித மாக அவசர ஆயத்தக் கூட்டம் மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமையில் நடை பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு. தியாகராஜன் தொடக்க கல்வித்துறையில் மாநில அளவிலான மூதுரிமை கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் மாநாடு சென்னை ராயப் பேட்டை ஒய் எம் சி ஏ மைதானத்தில் பிப்ரவரி 4 நடைபெறுகிறது.

நன்றி அறிவிப்பு மாநாட்டில் முதல் நிகழ்வாக ‘கல்வியில் கலைஞர்’ என்ற தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவும், கவிதை நூல் வெளியீட்டு பரிசு அளிப்பு நிகழ்வும் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் இயக்கப் பணிகள் குறித்து ஆய்வு மேற் கொண்டார். மாநாட்டில் புதுக் கோட்டை மாவட்டத்தின் சார்பில் 5000 பேர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

மாநாட்டில் முன்வைக்கப்பட உள்ள கோரிக்கைகளான புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வும், 2004 முதல் 2006 தொகுப்பு ஊதிய காலத்தை பணிக்காலமாக மாற்றுதல், பழைய முறைப்படி ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோருதல், பள்ளிக் கல்வித் துறையில் உள்ளது போல தொடக் கக் கல்வித்துறையில் பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடம் உருவாக்குதல், ஈட்டிய விடுப்புப் பணம் ஒப்படைப்பை மீண்டும் வழங்குதல், தொடக்க மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேவை இல்லை என அரசின் கொள்கை முடிவை எடுத்துக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட உள் ளன.
முன்னதாக மாவட்ட செயலாளர் நாயகம் வரவேற்றார். மாநிலச் செய லாளர் அருள் குமார் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட செய்தியாளர் ரகம துல்லா, மாவட்ட நிர்வாகிகள் பாபு சிவ ராம், பால்ராஜ், தனபால், கோவிந்தராஜன், வெள்ளைச் சாமி, தயாளன், செல்லக்கண்ணு, வீர மணி கலையரசன், பிரவீன், சுப்பிரமணி, தவமணி ஜோதி பாசு, கணேசன், சசி குமார், மாணிக்கம் சரவண பெருமாள், முருகன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறை வாக பொருளாளர் செந்தில் குமார் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment