திருவாரூர், ஜன. 29- திருவாரூரில் நேற்று (28.1.2024) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடை பெற் றது.
மதச்சார்பற்ற அரசியல் இயக்கங்கள் அனைத்தும் கலந்து கொண்டு கருப்புக் கொடி காட்டிய இந்த ஆர்ப்பாட்டத்தில் காவல் துறையால் கைது செய்யப்பட்டு திருவாரூர் கீழவீதி சாந்தி திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.
இதில் தலைமை கழக அமைப் பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் வீ.மோகன், மாவட்ட செயலாளர் வீர.கோவிந்த ராஜ், கி.அருன்காந்தி, சவு.சுரேஷ், கா.கவுதமன், கு.ராஜேந்திரன், இரா.மகேஸ்வரி, சீ.சரஸ்வதி, க.சரோஜா, செ.பாஸ்கரன், ஜெ.கனகராஜ், தே.நர்மதா, பிச்சையன், கே.அழகேசன், பாலச்சந்திரன். தர்மசீலன், பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்று கைது ஆயினர்.
No comments:
Post a Comment