மும்பை, ஜன.5 இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (அய்ஓபி) இணைய வழி சேமிப்புக் கணக்கு ‘போர்ட் டபிலிட்டி’ சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக அய்ஓபியின் ஒரு வங்கிக் கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு எளிதில் சேமிப்புக்கணக்கை மாற்றிக்கொள்ளமுடியும். இது குறித்து இந்த வங்கியின் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, காலத்துக்கு ஏற்ற வகையில் வாடிக்கையாளர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு எண்ம தொழில் நுட்பத்தில் முன்னோடியாகப் பயணிக்கிறது. வாடிக் கையாளர்களுக்கு எளிமையான வகையில், நவீன பயன்பாட்டுடன், இணைய வழி சேமிப்புக் கணக்கு போர்ட்டபிலிட்டி சேவை புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் பணியிட மாற்றம், கல்வி உள்ளிட்ட காரணங்களுக்காக இடமாற்றம் மேற்கொள் ளும் போது வங்கிக் கணக்கையும் அடிக்கடி மாற்ற வேண்டிய சிரமம் உள்ளது. அந்த வகையில், எண்ணற்றப் படிவங்களை நிரப்புவது, நீண்ட வரிசையில் காத்தி ருப்பது போன்ற சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணைய வழி சேமிப்புக் கணக்கு போர்ட்டபிலிட்டி சேவை மூலம் இதுபோன்ற சிரமங்களைத் தவிர்க்க முடியும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணைய வழி கணக்குப் பரிமாற்ற செயல்பாடு மிகவும் எளிதானது. இந்த சேவையை வாடிக்கையாளர்கள் இணையதள முகவரி மூலம் பயன்படுத்தி, தங்களது வங்கிக் கணக்கை தேவைப்படும் அய்ஓபி கிளைக்கு மாற்றம் செய்து கொள்ளலாம். முக்கியமாக, இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் வாடிக்கை யாளர்கள் அவர்களது சரியான கைப்பேசி எண்ணை வங்கிக்கு சமர்ப்பிப்பது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment