திருச்சி, ஜன. 22- திருச்சி, திருவெறும்பூரில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவன மான பெல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
பெல் வட்ட கூட்டுறவு சொசைட்டி மூலம் தொழிற்சாலையின் பல்வேறு பணிகளுக்கு சுமார் 40 வருடங்களுக்கு மேலாக சுமார் 3000-க்கும் மேற்பட் டோர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். தற்போது பல தொழிலாளர்கள் ஓய்வு பெற்றுவிட் டனர், சிலர் இறந்துவிட்டனர். தற் போது 700க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் சுமார் ரூ.24 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப் பட்டு வருகின்றது.
இதனால் தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியாமல் இத்தகைய தொழிலாளர்கள் வாழ்வா தாரத்துக்கு மிகவும் துயரப்பட்டு வரு கின்றனர். இவர்களை நிரந்தர தொழி லாளராக நிர்வாகம் பணியமர்த்த மறுத்து வருகின்றது.
இதனைக் கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங் களை நடத்தி வருவதோடு, ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட திராவிடர் தொழிலாளர் கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகின்றன. மேலும் தற்பொழுது வரை இது தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் இருந்து வருகிறது. இந் நிலையில் தற்பொழுது பெல் நிர்வாகம் தங்களை கொத்தடிமைகளாக நடத்தப் பட்டு வருவதை கண்டித்து கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி மாலை பெல் நிருவாகத்திடம் சொசைட்டி தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ் கொடுத்தனர். இதுவரை பெல் நிர்வாகம் அழைத்து பேசவில்லை.
இந்நிலையில் அனைத்து சொசைட்டி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் செய்யப் போவதாக தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து கூட்டமைப்பின் தலை வரும், திராவிடர் கழக மாநில தொழி லாளர் அணி செயலாளர் மு.சேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவர் கூறுகையில் பெல் நிறுவனம் சொசைட்டி தொழிலா ளர்களை ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் ஒரு நிலைப்பாடும், திருச்சி பெல் நிறுவனத்தில் வேறு வகை நிலைப்பாடும் எடுத்து வருவது கண்டிக் கத்தக்கதாகும். 14 ஆண்டுகளாக ஊதிய உயர்வின்றி தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். அவர்களுக்குப் குறைந்த பட்சம் மருத்துவ வசதி கூட கொடுக்க மறுக்கப்பட்டு வருகிறது. ஆகவே நாளை முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்குகின்றோம். இதில் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள். பாதுகாவல் பணி, மருத்துவர் பணி தொழிலாளர்களை தவிர மீதி அனைத்து தொழிலாளர்களும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
நாளை காலை 10 மணிக்கு அனைத்து தொழிலாளர்களும் பெல் நிறுவன மெயின் கேட்டு முன்னால் கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடி வெடுப்போம். இதில் கூட்ட மைப்பிலுள்ள தொழிற்சங்கங்களான திராவிடர் தொழிலாளர் கழகம் , அண்ணா தொழிற்சங்கம் (திமுக) சி.அய்.டி.யு, மதிமுக(எம்.எல்.எப்.), அம் பேத்கர் பி.எம்.எஸ் (அய்.என்.டி.யூ.சி), ஏ.டி.பி, எல்.எல்.எப் உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்களிலிருந் தும் தொழிலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்று கூறினார்.
இந்நிகழ்வில் பெல் தி.தொ.க.தலைவர் காமராஜ், தொமுச தொழிற்சங்க பொதுச் செயலாளர் நடராஜன், மோகன்ராஜ் (ஏ.ஜி.எஸ்), சுகுமார், ஜான் சகாயராஜ், செல்வராஜ், அம்பேத் கர் சங்கத்தை சேர்ந்த சாமி மாரியப்பன், முருகானந்தம், முருகேசன் உள்ளிட்ட பலர் இருந்தனர். பெல் நிறுவனத்தில் சொசைட்டி தொழிலாளர்கள் துப் புரவு பணி உணவகம் , ஸ்டோர் சிவில் மருத்துவமனை, டவுன்ஷிப் ஒயிட் வாஸ் உற்பத்திக் கூடங்கள் ஆகிய பல் வேறு பிரிவுகளில் பணி செய்து வருகின் றனர். இவர்களது வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பு பெல் நிறுவனத் தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment