திருப்பதி, ஜன.31- திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோவில் அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் காள ஹஸ்தி நகர காவல்துறை ஆய்வாளர் நரசிம்மராவ் மற்றும் காவல்துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய் விற்காக காளஹஸ்தி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினரின் விசாரணை யில், கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் திருப்பதியைச் சேர்ந்த பவித்ரா என்று தெரிய வந்தது. அவரின் கணவர் சீனிவாசுலுவிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில், கணவன்-மனைவிக்கு இடையே கடந்த சில நாள் களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், மனைவியைக் கொலை செய்ய திட்டமிட்ட சீனிவாசுலு 2 நாள்களுக்கு முன்பு ‘‘காளஹஸ்தி சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய் யலாம் வா” எனக்கூறி மனைவியை அழைத்துச் சென்று, ‘‘முதலில் சொர்ண முகி ஆற்றில் நீராடி விட்டு, பிறகு கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம்” என்று பவித்ராவிடம் கூறிய சீனிவாசுலு, நீராடுவதற்காக மனைவியை சொர்ண முகி ஆற்றுக்கு அழைத்து வந்தார். அப்போது சீனிவாசுலு, பவித்ராவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, உடலை ஆற்றிலேயே வீசி விட்டு தப்பிச் சென்றதாகக் கூறினார். இதை யடுத்து சீனிவாசுலுவை காவல்துறை யினர் கைது செய்து சிறையில் அடைத் தனர்.
No comments:
Post a Comment