அமெரிக்கர்களுடன் பொங்கல் விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 17, 2024

அமெரிக்கர்களுடன் பொங்கல் விழா!

featured image

வட அமெரிக்கா கேரோலைனா மாநிலத்தில் கேரி எனும் ஊரில் சிறப்பாகப் பொங்கல் கொண்டாடப் பட்டது.
50க்கும் மேற்பட்ட தமிழரல்லாத அமெரிக்கர்கள், 20 வடக்கிந்தியர்கள், நேபாளியர் மற்றும் 50 தமிழ் நாட்டு, ஈழத்துத் தமிழர்கள் பங்கேற்றனர்.
மாநில ஆளுநர் தமிழ் வரலாற்று மாதமாக அறிவித்த அறிவிப்புடன் நிகழ்ச்சி தொடங்கியது.

அமெரிக்க நாட்டுப் பண்ணும் , தமிழ் வாழ்த்தும் பாடப்பட்டது. தமிழ் வாழ்த்து அமெரிக்காவில் பிறந்து அட்லாண்டாவில் வாழும் தமிழ்க் குழந்தைகள் பாடிய காணொலி!
கேரோலைனா பிரிசெர்வ் எனும் சோம.இளங் கோவன், சரோ இவர்கள் அந்த 55 வயதிற்கு மேலுள்ள வர்கள் வாழும் “மகிழ்ச்சிக் குழுவின் “தலைவி டான் அம்மையார் வரவேற்புரையாற்றினார். நமது தோழர் அரிசோனா மாநிலத்தில் வாழும் ரஜனிகாந்த் அவர்கள் பொங்கல் பற்றியும், தமிழ், தமிழர்கள் பற்றியும் தயாரித் திருந்த காணொலி காண்பிக்கப் பட்டது. இங்கே மிகவும் கடுமை யாக உழைத்து நகர்மன்ற உறுப்பி னராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சரிகா பன்சால் (பஞ்சாபியர்) வாழ்த்து கூறினார்.
தமிழ், தமிழினப் பெருமைகள் பற்றிச் சுருக்கமாக அவ்வப்போது சோம.இளங்கோவன் நிகழ்ச்சியில் சொன்னார்.

ரேலி நகரத்தில் வாழும் தமிழர் ராஜன் அவர்கள் அங்குள்ள பலரின் ஒத்துழைப்பில் தயாரித்த சிம்பொனி மாண்புமிகு அப்துல் கலாம் அவர்களின் அய்ரோப் பிய நாடாளுமன்றத்தில் அவர் “யாதும் ஊரே யாவருங் கேளிர்” பற்றி ஆரம்பித்த உரையுடன் காணொலியில் காட்டப்பட்டது.

சுவையான பொங்கல் மற்றும் உணவுகளைக் கேரோலைனா வாழ் தமிழகக் குடும்பங்கள் கொண்டு வந்து படைத்தனர்.
அத்துடன் இங்குள்ள தமிழர் ஒருவர் கடையி லிருந்தும் சுவையான உணவு படைக்கப் பட்டது.
பின்னர் நமது இளைய தலைமுறையின் அருமை யானப் பேச்சாளர், அண்மையில் மலேசியத் தமிழ் இளைஞர் மாநாட்டில் பங்கேற்றவர் , வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க ஆட்சிக் குழுவில் உள்ளவர் அமரன் அவர்கள் படங்களுடன் தமிழர் வர லாற்றைப் பற்றியும், பொங்கல் சிறப்பு பற்றியும், உலகெங்கும் உள்ள தமிழர் கள், ஈழத் தமிழர்கள் அவர்களது இன்னல்கள் பற்றியும் அருமையான உரையாற்றினார்.

பல அமெரிக்கர்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வாழ்த்தினர்.
1960 களிலேயே அமெரிக்க வந்த விசுவேசுவரி அம்மையார் தமிழ்ப் பாடல் இயற்கையைப் பற்றிப் பாடினார். அனைவரும் கும்மியும் கோலாட்டமும் ஆடினார். சின்னப்பொண்ணு அம்மையாரின் கிராமி யப் பாட்டிற்கு அனைவரும் ஆடினோம்! அமெரிக்கர் களும் ஆடினார்கள்.
பழைய சென்னை மாநில ஆளுநராக இருந்த கிருஷ்ணா ராவ் அவர்களுடைய கொள்ளுப் பேரன் இங்கே நகர் மன்ற உறுப்பினராக உள்ள சிடீவ் அவர்கள் தமிழ், சென்னை பற்றியும் பொங்கல் பற்றியும் , விழா வில் கலந்து கொள்வதில் மிக்கப் பெருமை அடைவ தாகவும் பேசினார்.
அமெரிக்கர்கள் மிகவும் பாராட்டினார்கள்.

முகநூலிலும் பாராட்டிப் பதிவிட்டிருந்தார்.
இதே மாதிரி நியூ ஜெர்சியிலும் பொங்கல் விழா அமெரிக்க பிராங்க்ளின் நகர் தலைவருடனும், மற்ற அமெரிக்கர்களுடனும் கொண்டாடப்பட்டது.

No comments:

Post a Comment