திராவிடர் கழக செயலவைத் தலைவர் மானமிகு சு. அறிவுக்கரசு நேற்று (22.1.2024) மறைவுற்றார்.
தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அவரது உடலுக்கு, கழகக் கொடியினைப் போர்த்தி, மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
சு. அறிவுக்கரசு அவர்களின் மகள்கள், மருமகன்கள் மற்றும் பேரக் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், சட்டமன்ற மேனாள் உறுப்பினர் இள. புகழேந்தி, நகர தி.மு.க. செயலாளர் கே.எஸ். இராஜா, தஞ்சைஇரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன், திருச்சி மு. சேகர், ஆ. வந்தியத்தேவன் (மதிமுக), தா. திருப்பதி, த.சீ.இளந்திரையன், கடலூர் தண்டபாணி, அரங்க. பன்னீர்செல்வம், ரமா பிரபா, வழக் குரைஞர் ஆ. வீரமர்த்தினி மற்றும் தோழர்கள் உடனிருந்தனர் (கடலூர், 23-1-2024)
No comments:
Post a Comment