11.1.2024
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முந்தைய முக்கிய வழக்கில் மனுதாரராக இருந்த வழக்குரைஞர் முசாபர் இக்பால் கான் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார்.
* ராமன் கோவில் அழைப்பை கார்கே, சோனியா நிராகரித்தனர்; ‘தேர்தல் ஆதாயத்துக்காக’ பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., ‘அரசியல் திட்டம்’ செய்வதாக குற்றச்சாட்டு.
* இந்த ஆண்டு 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 2024 மிகவும் வலுவான ஜனநாயக நாடுகளைக் கூட சோதிக்கவும், சர்வாதிகார சார்வு கொண்ட தலைவர்களின் கரங்களை வலுப்படுத்தவும் உள்ளது.
தி டெலிகிராப்
* ராமன் கோயில் திறப்பு; நான்கு சங்கராச்சாரியர்களும் புறக்கணிப்பு. தர்ம சாஸ்திரத்திற்கு எதிராக செல்ல முடியாது’: முழுமையடையாத கோவிலை திறந்து வைத்து, அங்கு கடவுள் சிலையை நிறுவுவது மோசமான யோசனை என திட்டவட்டம்.
* சபாஷ் சரியான போட்டி? ராமன் கோயில் வைஷ்ணவப் பிரிவான ராமானந்த சம்பிரதாயத்துக்குச் சொந்தமானது. சன்னியாசிகளுக்கோ அல்லது சைவ அல்லது சக்தி பிரிவினருக்கோ அல்ல’ என ராமன் கோயில் கமிட்டி பதில்.
டைம்ஸ் ஆப் இந்தியா
* மகாராட்டிரா சட்டப்பேரவை தலைவர் தீர்ப்பு: ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா. இந்த உத்தரவு ஜனநாயகப் படுகொலை என உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உத்தவ் தரப்பு தீர்மானித்துள்ளது.
* ராகுல் காந்தியின் நடைப் பயணத்திற்கு மணிப்பூர் அரசு நிபந்தனையுடன் ஒப்புதல் அளித்துள்ளது
* தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வருகை; ஊழல் வழக்கில் கைதான பல்கலைக்கழக வேந்தருடன் சந்திப்பா? சர்ச்சை எழுந்துள்ளது.
– குடந்தை கருணா
Thursday, January 11, 2024
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Tags
# ஏட்டுத் திக்குகளிலிருந்து...
About Viduthalai
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
Labels:
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment