ஆளுநருக்கு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு கண்டனம்
சேலம்,ஜன.11- சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆய்வுப்பணியை ஆளுநர் ஆர்.என்.ரவி ரத்து செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது;-
“சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் கீழ் 120-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த மூன்று ஆண்டுகளாக ஜெகநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
ஊழல் பேர் வழி
இந்த சூழலில் ஜெகநாதனின் பதவிக் காலத்தில் பல்வேறு முறைகேடுகள் ஊழல் குற்றச்சாட்டுகள் என தொடர்ச் சியான புகார்கள் எழுந்து வந்தன. தன்னை ஆர்.எஸ்.எஸ்.காரர் என்றும், செய்யும் அத்தனை ஊழல்களையும் ஒன்றிய பாஜக அரசு காப்பாற்றும் என்றும் கருதி செயல்பட்டு கொண்டிருப் பவர்தான் இந்த ஜெகநாதன்.
இந்த சூழலில் பெரியார் பல் கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள ஜெகநாதன், றிஹிஜிணிஸி பவுண் டேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி, பல்கலைக்கழகத்தில் பணியாற்றக் கூடிய ஆசிரியர்களை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப் பந்தம் செய்ததான புகாருடன், ஏற்கெ னவே தொழிற்சங்கத்தினர், பேராசிரி யர்கள் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு முறைகேடு புகார்களை தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளனர்.
குறிப்பாக சட்டவிரோதமாக பணியாளர்களை நியமிப்பது, தகுதி இல்லாத ஆசிரியர்களை நியமிப்பது, பதவி உயர்வு வழங்குவதில் முறைகேடு, ஆட்சி மன்றக் குழுவின் அனுமதி இல் லாமல் பல்வேறு தனியார் அமைப்பு களுக்கு பெரியார் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிப்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்தன.
வழக்குப் பதிவு
இந்த நிலையில், பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடு காரணங்களுக்காக பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் மீது, தமிழ்நாடு அரசு சார்பில் காவல்துறை மூலம் ஆபாசமாகப் பேசு தல், கொலை மிரட்டல் விடுத்தல், கூட்டு சதி, மோசடி, போலி ஆவணங்களைத் தயாரித்தல், அரசு ஊழியராக இருந்து கொண்டு ஏமாற்றுதல், குற்றம் செய்ய முயற்சி செய்தல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல்துறை யினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வளவு குற்றச் செயல்களில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு கீழமை நீதிமன்றம் பிணை வழங்கியதை எதிர்த்து, காவல் துறை சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள் ளது. இவ்வழக்கு இன்னும் இரண்டு நாட்களில் விசாரிக்கப்படவுள்ள நிலை யில், ஆளுநர் ஆர்.என்.ரவி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு எனக் கூறிக் கொண்டு, அனைத்து பேராசிரியர்கள் மற்றும் பணியாளர் களுடன் கலந்துரையாடல் கூட்டத்தை இன்று (ஜன.11) நடத்த உள்ளதாக அறிய வருகிறோம்.
பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்து கொண்டு, தனக்குச் சொந்தமாக றிஹிஜிணிஸி பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி, ஒரு தனியார் நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு பல்கலைக்கழக நிதியை, மாணவர்களுக்கான பணத்தை, மக்கள் வரிப் பணத்தை கையாடல் செய் யும் நோக்கத்தோடு செயல்பட்டவரை காப்பாற்றும் விதமாக செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் உள்நோக்கம் என்ன என்பது அனை வருக்கும் தெரிந்ததே.
ஆளுநரின் உள்நோக்கம்
ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகளில் தொடர்புடைய ஒரு துணை வேந்தரை பாதுகாக்கும் நோக் கத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு செல் வது, ஊழல்வாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கவும், அவ்வழக்கை திசை திருப்பவும், சாட்சியங்களை கலைப்ப தற்கும் முறைகேடுகளில் ஈடுபட்ட வர்களை மறைமுகமாய் காப்பாற்ற நினைக்கிறாரா ஆளுநர் என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கல்வி முறைகளை மேம்படுத்த உருவாக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் துணை வேந்தரை நியமிப்பதில் தேர்வு குழுவில் தன்னிச் சையாக ஒருவரை ஆளுநர் நியமிப்பது தவறு என நீதிமன்றம் கருத்து கூறிய நிலையில், பல்கலைக்கழகத்தில் ஊழல் பெருச்சாளியாய் செயல்பட்டு கொண்டி ருக்கும் ஒருவரை காப்பாற்றுவதற்காக இத்தனை முயற்சியா? என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்புகின்றனர். தமிழ் நாட்டின் வருங்கால சந்ததியினரான மாணவர்களை மேம்படுத்தும் உன்னத மான பணியினை மேற்கொள்ளும் பல்கலைக்கழகத்தில் ஊழல் செய்தும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவரை காப்பாற்ற வேண்டுமென்ற உள்நோக்கத்தோடும், சாட்சியங்களை கலைப்பதற்காகவும், ஆய்வுக்கூட்டம் என்ற பெயரால் பல்கலைக்கழகத்துக்கு செல்லும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏஜெண்டாக இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. மேலும், உடனடியாக ஆளுநர் பல்கலைக்கழக ஆய்வுப் பணியை ரத்து செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறது.
கண்டனம்
அதையும் மீறி, ஊழல் வழக்கில் தொடர்புடைய நபருக்கு ஆதரவாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சேலம் பல்கலைக்கழகத்துக்குள் நுழைய முற்படுவாரேயானால், தி.மு.க. மாணவர் அணி, திராவிட மாணவர் கழகம், ம.தி.மு.க. மாணவர் அணி, இந்திய மாணவர் சங்கம்(SFI), அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF), முற் போக்கு மாணவர் கழகம் (RSF), முஸ் லிம் மாணவர் பேரவை(MSF), சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI), மாணவர் இந்தியா, அனைத்திந்திய கிராமப்புற மாணவர் சங்கம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாணவர் அணி, தமிழ்நாடு மாணவர் முன்னணி (TSF) உள்ளிட்ட தமிழ்நாடு மாணவர் இயக்கங் களின் கூட்டமைப்பு (FSO – TN) சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள மாணவர் அமைப்பு களின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தோழர்கள், முற்போக்கு சிந்தனையுடைய மாணவர், இளைஞர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.”
-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment