தேர்தலுக்குமுன் 'திருவிளையாடலா?' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 5, 2024

தேர்தலுக்குமுன் 'திருவிளையாடலா?'

featured image

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவில் பிரதமர் மோடி கோவிலைத் திறந்துவைத்து ராமன் சிலையை பீடத்தில் வைப்பார் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது. பொதுமக்கள் மற்றும் லால்கிருஷ்ண அத்வானி, முரளிமனோகர் ஜோஷி மற்றும் உமாபாரதிக்கு அழைப்பிதழ் கொடுத்த பிறகு நீங்கள் கோவிலுக்கு வரக்கூடாது என்று கேட்கப் பட்டுள்ளனராம்.
இந்த நிலையில் ‘அயோத்தி ராமர் கோயிலை வெடிகுண்டு வைத்துத் தகர்ப்போம். உத்தரப்பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்தியநாத் மற்றும் சிறப்புக் காவல் பிரிவான எஸ்டிஎப்-யின் ஏடிஜிபி அமிதாப் யாஷ் ஆகியோர் மீது வெடிகுண்டுகளை வீசுவோம்’ என்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாம்.

இதையொட்டி உத்தரப்பிரதேச காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது லக்னோவை சேர்ந்த தஹர் சிங் மற்றும் ஓம்பிரகாஷ் மிஸ்ரா என தெரியவந்ததையடுத்து அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மடிக்கணினி போன்றவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட தஹர் சிங் என்பவர் ஓம்பிரகாஷ் மிஸ்ரா என்ற பார்ப்பனருடன் சேர்ந்து ஆலம் அன்சாரி மற்றும் சுபைர்கான் என்ற இஸ்லாமியப் பெயர்களில் மின்னஞ்சல் உருவாக்கி, அந்த மின்னஞ்சல் கணக்கில் இருந்து, மிரட்டல் செய்திகளை அனுப்பியதும் கண்டறியப்பட்டது. இஸ்லாமியர்கள் மீது பழியைப் போட போலி மின்னஞ்சல் அனுப்பினார்களா என்ற கோணத்தில் இருவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு எங்கே போகிறது பார்த்தீர்களா?
பாபர் மசூதியை இடித்து ஆட்சியைப் பிடித்தது ஒருபுறம் இருக்கட்டும். ‘புல்வாமா’ என்பது என்ன என்று பலருக்கும் மறந்திருக்கலாம். 2019 பிப்ரவரி 14ஆம் தேதி அன்று காஷ்மீரில் புல்வாமாவில் நடந்த தாக்குதல் எப்படி எல்லாம் தேர்தலுக்குப் பயன்படுத் தப்பட்டது என்பது நினைவிருக்கட்டும்.

இன்னும் 4 மாதங்களில் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி திறக்கப்பட உள்ள ராமன் கோயிலை மய்யப்படுத்தி, இரண்டு இஸ்லா மியத் தோழர்கள்மீது சூழ்ச்சி வலை பின்னிய செய்தி வெளி வந்துள்ளது.
சாதனைகளைக் காட்டி வாக்கு வாங்க வக்கில் லாதவர்கள் வஞ்சனைகள், சூழ்ச்சிகள், வன்முறைகள் மூலம் மதவெறியைக் கிளப்பி அரசியல் குளத்தில் மீன் பிடிக்கத் துடித்துக் கொண்டுள்ளனர்.
உஷார்! உஷார்!!

No comments:

Post a Comment