கூட்டுறவு சங்கத்தில் உதவியாளர் பணி வாய்ப்புதென்னிந்திய பல மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் (சிம்கோ) காலியிடங் களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
காலியிடம்: அலுவலக உதவியாளர் 12, விற்பனையாளர் 22, சூப்பர்வைசர் 14 என மொத்தம் 48 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: சூப்பர்வைசர் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி, மற்ற பணிகளுக்கு பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / அய்.டி.அய்., முடித்திருக்க வேண்டும்.
வயது: 12.1.2024 அடிப்படையில் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: South India Multi-state Agriculture Co-operative Society Ltd., Head office, Town hall campus, Near old bus stand, Vellore – 632 004.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250
கடைசி நாள்: 29.1.2024
விவரங்களுக்கு: .simcoagri.com
No comments:
Post a Comment