தமிழ்நாடு தேர்வாணையத்தில் நடக்கவிருக்கும் நேர்காணலில் சுழற்சி முறையில் நீதிபதிகளை நியமித்தால் நீதிமன்ற வழக்கு விசாரணை பாதிக்கப்படாது - வழக்காடிகளுக்கும் சிரமம் இருக்காது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 29, 2024

தமிழ்நாடு தேர்வாணையத்தில் நடக்கவிருக்கும் நேர்காணலில் சுழற்சி முறையில் நீதிபதிகளை நியமித்தால் நீதிமன்ற வழக்கு விசாரணை பாதிக்கப்படாது - வழக்காடிகளுக்கும் சிரமம் இருக்காது!

featured image

தமிழ்நாடு தேர்வாணையத்தில் நடக்கவிருக்கும் நேர்காணலில் சுழற்சி முறையில் நீதிபதிகளை நியமித்தால் நீதிமன்ற வழக்கு விசாரணை பாதிக்கப்படாது – வழக்காடிகளுக்கும் சிரமம் இருக்காது!
நீதிபதிகள் நியமனத்தில் பின்பற்றப்படவேண்டிய அம்சங்கள்பற்றி ‘கொலிஜியம்’ கூறியதை – இதிலும் தலைமை நீதிபதி பின்பற்ற வேண்டுகிறோம்!
சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆற்றிய உரை

சென்னை, ஜன.29 தமிழ்நாடு தேர்வாணையத்தில் நடைபெறும் நீதிபதிகள் தேர்வில், சென்னை உயர்நீதி மன்றத்திலிருந்து சமூகநீதி அடிப்படையில் சுழற்சி முறையில் நீதிபதிகளை தேர்வாளராக நியமிக்க வேண்டும்; இதனால், நீதிமன்ற பணிகள் பாதிக்காது; நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ‘கொலிஜியம்’ கூறும் அம்சங்களைக் கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி அவர்கள், தேர்வர்களை நியமிக்கவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

“தமிழ்நாடு நீதித்துறை நியமனங்களும் – சமூகநீதியும்! சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள்!”

கடந்த 27.1.2024 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் “தமிழ்நாடு நீதித்துறை நியமனங்களும் – சமூகநீதியும்! சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள்!” என்ற தலைப்பில் நடை பெற்ற சிறப்புக் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

75 ஆம் ஆண்டு சுதந்திரம் என்று இன்றைக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். கடந்த 26 ஆம் தேதிகூட திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய ‘‘வெல்லும் ஜனநாயகம்‘’ மாநாட்டில்கூட விளக் கிச் சொன்னேன். அரசமைப்புச் சட்ட முகப்புரையை அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய தலைமையில் உருவாக்கியதைத்தான் விளக்கிச் சொன்னோம்.

“We, the people of India having solemnly resolved to constitute India into a sovereign socialist secular democratic republic and to secure to all its citizens:..’’இந்திய அரசமைப்புச் சட்டத்தினுடைய இத்தகைய தன்மைகள் ஒன்றிய பா.ஜ.க. அரசினால் இன்றைக்கு மாற்றப்பட்டு வருகின்றன – மிக வேகமாக. இன்னும் முழுமையாக அதற்கு ஒரு முடிவு காணவேண்டுமானால், “இராமன் பெயரைச் சொல்லி, நாங்கள் மீண்டும் ஒன் றியத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்றால், முடிவு கட்டிவிடுவோம்’’ என்கிறார்கள்.

JUSTICE, social, economic and political

ஆகவே, எல்லோருக்கும் எல்லாம்; அனைவருக்கும் அனைத்தும்.

நமக்கு முழு உரிமை உண்டு –
அரசமைப்புச் சட்டப்படி!

75 நீதிபதிகள் நம்முடைய கைகளில் இருக் கிறார்கள். ஒரே ஒரு மைனாரிட்டி சமுதாயத்தைச் சேர்ந்தவர் கிடையாதா? ஒரே ஒரு எஸ்.டி. சமுதாயத்தைச் சேர்ந்தவர் கிடையாதா? ஒரே ஒரு பெண் நீதிபதி கிடைக்கவில்லையா? என்று கேட்பதற்கு, நமக்கு முழு உரிமை உண்டு – அரசமைப்புச் சட்டப்படி.
அருமையாக ஜஸ்டிஸ் ஓ.சின்னப்பரெட்டி, ªஹின்றி வசந்தகுமார் வழக்கில் சொன்னார்,

‘‘What we want is not charity; but Parity’’

“ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தர்மம் பிச்சை போடுவதல்ல; சலுகையல்ல – முழுக்க முழுக்க அவர்களுடைய உரிமை” என்று சொன்னார்.
பல நீதிபதிகளுக்கும் பொறுப்பைக் கொடுத்தால் நம்பிக்கை வரும்!

10, 12 நாள்கள் நடைபெறும் நேர்முகத் தேர்வில், நான்கு நீதிபதிகள், அவர்களுடைய பணிகளை விட்டு விட்டு நேர்முகத் தேர்விற்கு தேர்வாளர்களாக வரு கிறார்கள்.
இதனால், வழக்காடிகளுக்கு எவ்வளவு இடையூறு கள்; வாய்தா, வாய்தா என்று வழக்குத் தள்ளிப் போகும். ஒரு மாதம் கழித்து அந்த வழக்குக்குத் தேதி கொடுப்பார்கள்.
பொதுமக்களுக்கும் ‘குயிக் டிஸ்போசர்’ என்று ஒரு பக்கத்தில் சொல்லுகிறார்கள். வாய்தா இல்லாமல் வழக்கு களை உடனடியாக விசாரித்துத் தீர்ப்பு வழங்கவேண்டும் என்று. அதற்கு, மேற்சொன்ன நேர்முகத் தேர்வு இடை யூறாகவும் இருக்கலாம்.

எனவே, பல நீதிபதிகளுக்கும் சுழற்சி முறையில் அந்தப் பொறுப்பைக் கொடுத்தால், அதிலும் குறிப்பாக எல்லோருக்கும் கொடுத்தால், அதில் நம்பிக்கையும் வரும் என்பது மட்டுமல்ல; அதைவிட மிக முக்கியம் – வழக்காடிகளும் பாதிக்கப்படமாட்டார்கள்; மக்களும் பாதிக்கப்பட முடியாத அளவிற்கு வாய்ப்புகள் இருக் கின்றன.
வழக்காடிகளுக்கும் நன்மையைத் தரும் என்பது கூடுதல் நன்மை!
சில நீதிபதிகள் 12 நாள்கள் சர்வீஸ் கமிஷன் தேர்வராக சென்றால், தங்களிடம் விசாரணைக்கு வரும் வழக்குகளை நீண்ட நாள்கள் தள்ளி வைக்கும் நிலை ஏற்படுமே! சுழற்சி முறையில் நீதிபதிகள் தேர்வர்களாக நியமிக்கப்பட்டால், இந்த நிலை ஏற்படாது; இரண்டொரு நாள்கள் மட்டுமே வழக்குகள் விசாரணை தடைபடும். இதனால் வழக்காடிகளுக்கும் நன்மையைத் தரும் என்பது கூடுதல் நன்மையாகும்.

அந்த நேர்முகத் தேர்வின் தேர்வாளர்களாக பலரும் இருக்கவேண்டும் என்பதை, நாங்கள் மட்டும் சொல்லவில்லை.

அய்யா நீதியரசர் அரிபரந்தாமன் அவர்கள், பார்லி மெண்ட்ரி கமிட்டியினுடைய ரிப்போர்ட்டிலிருந்து ஒரு வார்த்தையைச் சொன்னார்.

Diversity Deficitஅதாவது, “பல பேருக்குப் பகிர்ந்தளிக்கவேண்டும். ஒரு குறிப்பிட்டவர்களே இல்லாமல், பல பேர் இருக்கவேண்டும்.”
இங்கே இருக்கின்ற தலைமை நீதிபதிகள் உள்பட, எதை அவர்கள் பின்பற்றுவார்கள்? உச்சநீதிமன்றத்தைத் தான் அவர்கள் பின்பற்றுவார்கள். அதைத் தாண்டி நாங்கள் செய்ய முடியாது என்று சொல்வார்கள்.
பார்லிமெண்டரி கமிட்டியைத் தாண்டி, இப்பொழுது நான் சொல்லுகின்ற தகவலை நன்றாகக் கவனியுங்கள்.

பரிந்துரையில்
வெளிப்படைத் தன்மை தேவை

19.1.2024 ஆம் தேதியன்று உச்சநீதிமன்ற நீதிபதி கவுல் அவர்களின் பதவி முடிவடைந்தது. அந்த இடத்திற்கு, மகாராட்டிரத்தைச் சார்ந்த ஒருவர், கருநாடக மாநில உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தவர் – அவர் எஸ்.சி., சமுதாயத்தைச் சார்ந்தவர். அவர்மீது நல்ல அபிப்பிராயம் இருக்கிறது.
‘‘அவருடைய பணிகள் சிறப்பாக இருப்பதால், அவரை நாங்கள் பரிந்துரை செய்கிறோம் – கொலி ஜியத்தில்” – என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, சஞ்சய் கண்ணா, வி.ஆர்.கவாய், சூர்யாகாந்த், அனிருதா போஸ் உள்பட ஆறு நீதிபதிகள் ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை செய்தார்கள்.

அந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு, உடனடியாக சில நாள்களுக்கு முன்பு அவர் பதவியேற்றுக் கொண்டார்.
இதுபோன்று பரிந்துரை செய்தால், அதில் வெளிப் படைத் தன்மை இருக்கவேண்டும். அந்த வெளிப்படைத் தன்மை மற்றவர்களுக்குத் தெரியவேண்டும் என்பதற் காக, இணைய தளத்தில் வெளியிடுகிறார்கள்.

10 நாள்களுக்கு முன்பு, அந்த நீதிபதியை நியமனம் செய்வதற்கு எப்படி கொலிஜியம் அந்த முடிவிற்கு வந்தது என்று சொல்லுகின்றபொழுது, சில அளவுகோல், சில முறைகள், இன்னின்ன தகுதிகள் இருக்கிறது என்று அவர்கள் சொல்லியிருப்பதை நான் இங்கே படிக்கிறேன், கேளுங்கள்.

‘‘The Collegium deliberated on and discussed the names of Chief Justices and senior puisne Judges of the High Courts eligible for appointment to the Supreme Court. The Secretariat has prepared a compilation of relevant background material to assist the Collegium.
While recommending appointments to the Supreme Court, the Collegium has taken into consideration the following aspects:

1. The seniority of Chief Justices and senior puisne Judges
in their respective parent High Courts as well as overall
seniority of the High Court Judges;
2. The merit, performance and integrity of the judges under
consideration; and
3. The need to ensure diversity and inclusion in the
Supreme Court by:
(i) representation of High Courts which are not
represented or are inadequately represented, in the
Supreme Court;
(ii) appointment of persons from marginalized and
backward segments of society;
(iii) gender diversity; and
(iv) representation of minorities.”

இதன் தமிழாக்கம் வருமாறு:

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்திற்கான கொலிஜியம் கவனத்தில் கொள்ளப்பட்டவை!

‘‘உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்திற்கு, உயர்நீதி மன்றங்களின் தலைமை நீதிபதிகள், அடுத்த நிலை மூத்த நீதிபதிகள் ஆகியோரின் பெயர்கள் உச்சநீதிமன்ற கொலி ஜியத்தால் விவாதித்து பரிசீலிக்கப்படுகிறது. உச்சநீதிமன்றத் தின் செயலகமானது பரிசீலனைக்குள்ளான நீதிபதிகள் பற்றிய பின்னணிக் குறிப்புகள் மற்றும் இதர விவரங்களை தொகுத்து வழங்கிடும்.

உச்சநீதிமன்ற நீபதிகள் நியமனங்களுக்கான பரிசீலனை, பரிந்துரைக்கு, கொலிஜியம் அடியிற்கண்ட அடிப்படைகளைக் கருத்தில் கொண்டது.

1. தலைமை நீதிபதிகளின் மற்றும் அடுத்த நிலை நீதிபதி களின் பணி மூப்பு நிலை (ஷிமீநீuக்ஷீவீtஹ்). நீதிபதிகள் சார்ந்த உயர்நீதிமன்றத்திலும், அனைத்து உயர்நீதிமன்ற நிலையிலும் உரியவர்களது பணி மூப்பு கருத்தில் கொள்ளப்பட்டது.

2.நீதிபதிகளின் திறமை, பணிக்காலம், நேர்மைத் தன்மை கணக்கில் கொள்ளப்பட்டது.

3.பரவலான, உரியவர்களை உள்ளடக்கிய நீதிபதிகளின் பரிந்துரையில்,
(i) முற்றிலும் பிரதிநிதித்துவப்படாத உரிய அளவில் பிரதிநிதித்துவப்படி உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள்.
(ii) சமூகத்தில் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவினங்கள் சார்ந்த நீதிபதிகள்.
(iii)பாலின பரவலாக்கம்.
(iv) சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் – இவையனைத் தும் கருத்தில் கொள்ளப்பட்டது.”

உச்சநீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறதோ, அதற்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறார்களோ, அதே அளவுகோலைத்தான் நேற்று ‘விடுதலை’யில் எழுதிய அறிக்கையில் நாங்கள் எழுதியிருக்கின்றோம். அதைத்தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு வேண்டுகோளாக வைத்தோம். அந்த அளவுகோலை நான்கு பேர் விஷயத்தில் பின்பற்றவில்லை என்று.
இது வெறும் நியமனத்திற்குத்தான் என்று நீங்கள் சொல்ல முடியாது. நியமனத்திற்கே இதை செய்யும் பொழுது, மற்ற சங்கதிகளுக்கு எத்தனை மடங்கு அதனைக் கூட்டிக் கொள்ளவேண்டும்.
ஆகவேதான்,

The earnestly appeal to the most Honorable Chief Justice of Madras High Court, to re-examine and re appoint and re select people. Because it will be satisfying all these names as the guidelines provided by the Supreme Court in the latest one.

இதுதான் மிக முக்கியம். ஆகவேதான், இதனைத் தெளிவாக எடுத்துச் சொல்லுகிறோம்.
முதலில் வேண்டுகோள்!

அதற்காக நாங்கள் உடனே போராட்டமோ, மற்ற தையோ செய்வோம் என்கிற அவசியமில்லை.
அறிஞர் அண்ணா அவர்கள், தந்தை பெரியார் அவர்களுடைய அருந்தொண்டராக, மாணவராக வளர்ந்த காரணத்தினால், அவர் ஒன்று சொல்வார்,

‘‘எடுத்தவுடன் போராட வேண்டிய அவசியமில்லை எல்லாவற்றிற்கும். வாதாட வேண்டிய நேரத்தில் வாதாடவேண்டும்; வாதாடுவதில் பயனில்லையானால், பிறகு போராடவேண்டிய அவசியம் வரும்‘’ என்று.
அப்படி போராடவேண்டிய அவசியம் எங்களுக்கு வரக்கூடாது.
உரிமையைத்தான் கேட்கிறோம்;
பிச்சை அல்ல!

ஏனென்றால், நாங்கள் உரிமையைத்தான் கேட் கிறோம். நாங்கள் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை, சலுகையை கேட்கவில்லை. உரிமையைத்தான் கேட்கிறோம். அந்த உரிமையை நியாயமாகச் செய் வார்கள் என்கின்ற நம்பிக்கையோடு கேட்கிறோம்.
ஏனென்றால், செய்யக்கூடிய இடத்தில் இருக் கக்கூடியவர் நேர்மையானவர் என்பதால். அவரு டைய தலைதாழாத நீதித்தன்மை – ஓர்ந்து கண் ணோடாத அவருடைய நீதித்தன்மை என்பதால் தான் இதனையெல்லாம் எடுத்துச் சொல்லுகிறோம்.
இவை எல்லாவற்றையும்விட, குறிப்பிட்ட ஒரு நீதிபதி பிரச்சினைக்குரியவராக இருக்கின்றவரை, ‘தேர்வு செய்யுங்கள்’ என்று அமர்த்தினால், அவர் யாரை தேர்வு செய்வார்? அவருடைய உணர்வுகள் எப்படி இருக்கும்?
என்ன மாதிரியான கேள்விகளை அவர் கேள்வி கேட்பார்.
இந்த அமைப்பில் இருந்திருக்கிறீர்களா? அதில் உறுப்பினராக இருந்திருக்கிறீர்களா? என்றுதானே கேட்பார்..
ஆகவே, மதிப்பெண் போடுவது என்பது, தேர் வாளர்களின் உரிமை.

சென்னை உயர்நீதிமன்றத்தலைமை நீதிபதிக்கு கோரிக்கை – வேண்டுகோள்!

இத்தனைப் பிரச்சினைகள் இருப்பதினால், இதனைக் கண்டித்து நாங்கள் உடனே போராட்டக் களத்திற்குப் போகாமல், மிக முக்கியமாக, ஒரு வேண்டுகோளாக, இதனை சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதிக்கு கோரிக்கையாக வைக்கின்றோம்.

இங்கே நீதியரசர் உரையாற்றும்பொழுது, adequate representation பற்றி மிக அழகாகச் சொன்னார்.
இங்கே நிறுவனங்கள் நடக்கும்பொழுது என்ன சொன்னார்கள்?
இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 16(4):

“Nothing in this article shall prevent the State from making any provision for the reservation of appointments or posts in favour of any backward class of citizens which, in the opinion of the State, is not adequately represented in the services under the State.”

இதன் தமிழாக்கம் வருமாறு:

இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 16(4)

“அரசுப் பணி நியமனங்களிலோ, பணியிடங்களிலோ பிரதிநிதித்துவப்படாத அனைத்து வகை பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்காக அரசு ஏற்படுத்திடும் இடஒதுக்கீட்டை சட்டக்கூறு 16இல் உள்ள எந்தப் பிரிவும் கட்டுப்படுத்தாது.”

யாருக்கு உரிமை என்றால், அரசுக்குத்தான். அரசி னுடைய கருத்து. அரசு, சமூகநீதியை நடைமுறைப்படுத்த வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்ற ஓர் ஆட்சி – மக்கள் சமூகநீதியை விரும்புகிறார்கள் என்றால், அதை செய்வதுதான் ஆட்சியினுடைய கடமை.

ஆகவேதான், ஆளுங்கட்சி நடத்துகின்ற பத்திரி கையில் அதனை எடுத்துப் போட்டார்கள்.

போதுமான அளவு பிரதிநிதித்துவம்!

அப்படிப்பட்ட சூழ்நிலையில், நீதிமன்ற நியமனத் தைப்பற்றி சொல்லும்பொழுது நீதியரசர் அய்யா அரிபரந்தாமன் அவர்கள், adequate representation – மற்றவர்கள் சமமாக வரக்கூடிய வரையில், உயர் ஜாதியைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்யக்கூடாது என்றார்.

இதுதான் சரியான மொழி பெயர்ப்பு; சரியான சட்ட விளக்கம்.

adequate என்றால் என்ன? நான் பல கூட்டங்களிலும் சொல்லியிருக்கிறேன். மீண்டும் இந்த சந்தர்ப்பத்தை யொட்டி சொல்கிறேன் – adequate என்ற வார்த்தை யின்மூலம் எதிலிருந்து வந்தது என்றால், adequatus என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்தது. அதிலிருந்துதான் ஆங்கிலச் சொல்லாக adequate என்ற வார்த்தை வருகிறது. adequate representation என்றால், போதிய அளவிற்கு – யாருக்குப் போதிய அளவிற்கு? என்பது தான் மிக முக்கியம். adequate representation என்றால், போதாமை என்று அர்த்தம்.

adequate representation என்பதற்கு சரியான பொருள் என்னவென்றால், போதுமான அளவிற்கு என்றால், நான் சாப்பிடுகின்ற அளவு வேறு; நீங்கள் சாப் பிடுகின்ற அளவு வேறு. ஒவ்வொருவரும் சாப்பிடுவது வெவ்வேறு அளவு இருக்கும். ஆனால், அதற்கு சரியான அர்த்தம் அகராதியில் என்ன பொருள் போட்டிருக்கிறது என்றால், adequate என்றால், Till it is equalised மற்றவர்களோடு சமமாக வரக்கூடிய வரையில் என்பதாகும்.

மேடு, மேடாகவே இருக்கும்; பள்ளம், பள்ளமாகவே இருக்கும்

ஏற்கெனவே மேட்டில் அமர்ந்திருக்கிறார்களே, அவர்களுக்குச் சமமாக வருகின்ற வரையில் என்று அர்த்தம்.
ஆனால், இப்பொழுது நடப்பது எப்படி என்றால், மேட்டையும் – பள்ளத்தையும் நாம் சமப்படுத்தவேண்டும் என்று சொல்லி, பள்ளத்தைச் சரி செய்வதற்காக அதில் மண்ணைப் போடும்பொழுது, ஒருவர் கெட்டிக்காரத் தனமாக சொல்கிறார், ‘‘சமவாய்ப்பு கொடுங்கள்; ஒரு கூடை மண்ணைப் பள்ளத்தில் கொட்டுங்கள்; இன் னொரு கூடை மண்ணை மேட்டில் கொட்டுங்கள்’’ என்கிறார்.

அப்படியென்றால், மேடு, மேடாகவே இருக்கும்; பள்ளம், பள்ளமாகவே இருக்கும்.

ஆகவே, அடுத்து சமமாக வருகின்ற வரையில், வேறு நியமனங்களை மற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்பதுதான் அரசமைப்புச் சட்டத்தினுடைய உண்மையான அர்த்தம்.
எனவேதான், இதனை மீண்டும் பரிசீலிக்கவேண்டும். இல்லையானால், அடுத்தடுத்து நாங்கள் பல செய்திகளை யோசிக்கவேண்டி இருக்கும். அதற்கு அவசியமே இருக்கக்கூடாது.
ஏனென்றால், 245 நியமனங்களுக்கு அடுத்தடுத்து வரவேண்டிய இளைஞர்கள் நிறைய இருக்கிறார்கள். அந்த இளைஞர்களுடைய எதிர்காலத்தையே மிகப் பெரிய அளவிற்குத் திருப்பிவிடுவார்கள். இப்பொழுது பார்த்தீர்களேயானால், மற்றவர்களுக்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறது.
ஆகவே நண்பர்களே, இதை முழுக்க முழுக்க வேண்டுகோளாக வைக்கிறோம். நிச்சயமாக இதைப் பரிசீலிப்பார்கள் என்று நினைக்கின்றோம்.
இதற்கு நாம் பலிகடா ஆகிறோம் என்பதுபற்றி நமக்குக் கவலையில்லை. சமூகத்திற்கு யாராவது ஒருவர் எடுத்துச் சொல்லவேண்டும். அந்த வகையில், திராவிடர் கழகம் இதனை எடுத்துச் சொல்லுகிறது.

பெரியார் மண்ணைப் பொறுத்தவரையில், சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சமூக நீதி பிரச்சினையில் ஒன்றாக இருப்பார்கள்.
தமிழ்நாட்டில், பி.ஜே.பி. ஒன்றுதான் எதிர்க்கும் என்று நீதியரசர் அரிபரந்தாமன் அவர்கள் சொன்னார்கள்.
அதில்கூட ஒரு சிறிய திருத்தத்தைச் சொல்கிறேன், 69 சதவிகித இட ஒதுக்கீட்டு மசோதாவைக் கொண்டு வரும்பொழுது நாடாளுமன்றத்தில் அவர்களும் ஆதரித்தார்கள்.

69 சதவிகிதத்திற்காக, 9 ஆவது அட்டவணை பாதுகாப்பு வந்தபொழுது, அர்ஷத்மேத்தா பிரச்சினை யால், நாடாளுமன்றமே நடக்கவில்லை. அந்த சமயத்தில், வி.பி.சிங் அவர்களும்,

நாங்களும் கேட்டோம். வாஜ் பேயி அவர்கள்தான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். பிரதமராக நரசிம்மராவ் இருந்தார். வெல்பேர் மினிஸ்டராக இருந்தவர் சீதாராம் கேசரி அவர்கள். தமிழ்நாட்டில் ஜெயலலிதா அம்மையார் முதலமைச்சராக இருந்தார்.

டில்லியில் எல்லோரையும் சந்தித்து முயற்சி செய்தோம் நாங்கள். அப்பொழுது வாஜ்பேயி அவர்கள், ‘‘விவாதம் இல்லாமல் வாக்களிக்கலாம்‘’ என்று சொன்னார்.

69 சதவிகித மசோதா எதிர்ப்பே இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது!

69 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது – எதிர்ப்பே இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற் றப்பட்டது. அதை எதிர்த்தவர்கள் எத்தனை பேர் என்றால், ‘‘பூஜ்ஜியம்‘’ தான்.
இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், இன்றைய தலைமை நீதிபதியின் பெயரைக் கொண்ட வழக்கு ரைஞர் மும்பையில் உள்ளவர் ஒரு புத்தகம் எழுதி யிருக்கிறார். அதில், நான் மேற்சொன்ன தகவல்கள் எல்லாம் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

ஆகவேதான், 69 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது என்ற பெருமையோடு, இன்னொரு பெரிய விஷயம் – எதிர்ப்பே இல்லாமல் நாடாளு மன்றத்தில் நிறைவேறிய 76 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் என்பதும் ஒரு வரலாறு.

இப்படிப்பட்ட ஒரு நீண்ட வரலாற்றைத் தமிழ் மண் படைத்திருக்கின்ற காரணத்தால், இங்கே சுலபமாக இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மீண்டும் நினைவூட்டுகிறோம்!

எனவேதான், மிகுந்த அன்போடு, மரியாதையோடு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறோம்.
இன்னும் காலதாமதமாகவில்லை. அவசர வழக்கு என்றால், நள்ளிரவில் 12 மணிக்கு நீதிபதியைச் சந்தித்து தீர்ப்பு வாங்குகின்ற வழக்கம் இருக்கிறதே!

உச்சநீதிமன்றத்தினுடைய
வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள்;
அதனை செயல்படுத்துங்கள்!

உச்சநீதிமன்றத்தினுடைய வழிகாட்டுதலையும் சொல்லி விட்டோம். சிறுபான்மையினருக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்; பெண்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.
No Diversity Deficit என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அங்கே பன்முகத்தன்மைக்கு வாய்ப்பு இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
எனவே, நீங்கள் எங்களுக்காக இதனைச் செய்ய வேண்டாம்; உச்சநீதிமன்றத்தினுடைய வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள்; அதனை செயல்படுத்துங்கள்.
சிறப்புக் கூட்டத்திற்கு வந்த நண்பர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் நன்றி!

நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

No comments:

Post a Comment