லக்னோ,ஜன.26– நாட்டிலேயே அதிக ‘நீட்’ தேர்வு பயிற்சி மய்யங்கள் கொண்ட இடமான பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. கோட்டாவில் ஆண்டுக்கு சராசரியாக 15-க்கும் மேற் பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து வரும் நிலையில், கடந்தாண்டு அதிகபட்சமாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 30 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர்.
இந்நிலையில், 23.1.2024 அன்று இரவு கோட்டாவில் நீட் தேர்வுக்கு படித்து வந்த உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த முகமது சையத் என்ற மாணவர் ஜவஹர் நகர் என்ற பகுதியில் உள்ள தனது தங்கும் விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
No comments:
Post a Comment