சென்னை, ஜன.1- சமீ பத்தில் சென்னை, தென் மாவட்டங்களில் பெய்த கன மழைக்கு காரணம் என்ன? என தனியார் அமைப்பு ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த ஆய்வறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் டிசம்பர் மாதம் கனமழையை எதிர்கொண் டது. பொதுவாக வடகிழக்கு பருவமழை 70 நாட்கள் நீடிக்கும். இது, தமிழக, ஆந்திர கடலோரங்களை தான் அதிக பாதிப்புக்கு உள்ளாக்கும்.
கடந்த அக்டோபர் மாத முதல் டிசம்பர் மாதம் வரை 453.70 மில்லி மீட்டர் மழை பெய்தது. இயல்பான மழை என்பது 430.70 மில்லி மீட்டர் ஆகும். தற்போது பெய்தது இயல்பைவிட அதிகமானதாகும்.
காலநிலை மாற்றமே காரணம்
காலநிலை மாற்றம் இந்த கனமழைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சுழற்சி வெப்பச்சலன மேகங்களை உருவாக்கியது.
அதுமட்டுமல்லாமல் கணி சமான வளிமண்டல வேறு பாட்டுக்கு வழி வகுத்து ஈரப்பதம் நிறைந்த கிழக்கு காற்று வலுவாக உயர்ந்ததும் இந்த கன மழைக்கு காரணம் என்பது தெரிகிறது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment