மூன்று ஆண்டுகள் ஒரேயிடத்தில் பணியாற்றிய காவல்துறையினர் பணியிட மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 5, 2024

மூன்று ஆண்டுகள் ஒரேயிடத்தில் பணியாற்றிய காவல்துறையினர் பணியிட மாற்றம்

சென்னை. ஜன.5 நாடாளு மன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கும் காவல் துறை தலைமை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: நாடாளுமன்ற தேர்தலை வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு ஆலோ சித்து வருகிறது. இதன் ஒரு பகுதி யாக ஒரே இடத்தில் 3 ஆண்டு களுக்கு மேலாக பணிபுரியும் காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்யும்படி அனைத்து மாநில காவல் துறைக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு காவல்துறை சட்டம் – ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர்ஜிவால் சுற்றறிக்கை ஒன்றை அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் அனுப்பி உள்ளார். அதில், கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாடு காவல் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்தால் அவர்களை பணியிடமாற்றம் செய்ய வேண்டும். அனைத்துப் பிரிவு காவல்துறையினரும் அவர்களது சொந்த மாவட் டத்தில் பணிபுரிந்தால், வேறு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இதற்கான பட்டியலை காவல் ஆணையர்கள், சரக காவல் துறை தலைமை இயக்குநர்கள் (டிஅய் .ஜிக்கள்), மண்டல காவல் துறை துணைத் தலைவர்கள் தயாரிக்க வேண்டும்.

சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய 3 காவல் ஆணையரகங்களும் தங்களுக்குள் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கொள்ள வேண்டும். இந்த பணியிட மாற்றத்துக்கு கணினிமயமாக்கல் பிரிவு, சிறப்புப் பிரிவுகள் ஆகியவை மட்டும் விதிவிலக்காகும். அதே போல காவல்துறையின் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் அதி காரிகள் இந்த பணியிட மாற்றத் துக்கு உட்படுத்தப்பட மாட் டார்கள். பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ள காவல்துறையினர் இந்த பணியிட மாற்ற பட்டி யலில் இடம் பெற மாட்டார்கள். அதேபோல அவர்களுக்கு தேர்தல் பணியும் வழங்கப்பட மாட்டாது. கடந்ததேர்தல்களில் புகார்களில் சிக்கிய, குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.மேலும் பணி நீட்டிப்பு பெற்றவர்களையும் தேர் தல் பாதுகாப்புப் பணியில் ஈடு படுத்துவதை தவிர்க்க வேண்டும். பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டிய காவல்துறையினர் பட் டியலை தயாரித்து ஜனவரி 10-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு காவல்துறை யின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment